SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை! தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது?

AAI Recruitment 2026 : இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூடிவ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 23, 2026, 12:16 PM IST | Updated: Aug 23, 2026, 12:27 PM IST
Join

AAI Recruitment 2026 : இந்திய விமான நிலைய ஆணையம், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில், 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம்.

இந்திய விமான நிலையத்தின் ஆணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த மேலாளர் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 12/2026/CHQ/DR-CBT

பணி: ஜூனியர் எக்ஸிகியூடிவ் (Junior Executive)

மொத்த காலியிடங்கள் : 129

துரைவாரியான காலியிடங்களின் விவரம்:

Junior Executive (finance)-36
Junior Executive (law) -6
Junior Executive (Operations - 79)
Junior Executive (Surgery & Cartography) -8

சம்பளம் எவ்வளவு:

இதற்கான சம்பளமாக மாதம் ரூ.40,000ல் இருந்து ரூ.1,40,000 வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவையான தகுதிகள் என்ன?

நிதியியல் பிரிவில், எம்.பி.ஏ, எல்.எல்.பி முடிஹ்த்டு பார் கவுன்சிலில் பதிவு செய்திருப்பவர்கள், பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ, பி.டெக், பி.ஆர்க், பி.எஸ்சி, சிஎஃபே, சிஏ, எம்.எஸ் சி முடித்தவர்கள், தங்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக இருக்கின்றனர். இதற்கு பணி அனுபவம் தேவையில்லை என்பதால், புதிதாக பட்டம் பெற்றவர்களும் கூட விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு எவ்வளவு இருக்க வேண்டும்?

7.9.2026 தேதியின் படி, இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில், எஸ்சி, எச்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

பணி : மேனேஜர்

மொத்தமாக இருக்கும் காலியிடங்கள் :260
வேலை பதவி - Manager (Eng. - Civil) - 145

காலியிடங்களின் பிரிவு:

சம்பளம் எவ்வளவு?

இதற்கான சம்பளம், மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை

தகுதி என்ன?

விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணம்?

ஓபிசி, EWS, பொது பிரிவினருக்கு ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திரனாளிகள், பெண்கள், ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணமில்லை.

எப்படி விண்ணப்பிப்பது?

www.aai.aero எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்?

வரும் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் (07/09/2026) விண்ணப்பிக்க வேண்டும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES