SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மாதம் ரூ.58,000 சம்பளம்! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Chennai Jobs: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 09, 2026, 06:23 IST | Updated: Sep 09, 2026, 06:39 IST
Image Credit: Image Source: Chatgpt
Join

Chennai Jobs: தமிழக அரசு மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது.  துறை வாரியாக உள்ள காலிப் பணியிடங்களை கண்டறிந்து தற்காலிக அடிப்படையில் தமிழக அரசு நிரப்பி வருகிறது. இதற்கான அறிவிப்புகளை அவ்வப்போது தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

சென்னை மண்டல புள்ளி இயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு

சென்னை மண்டல புள்ளி இயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனசுழற்சி முறையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  இதர தகுதிகளை பொறுத்தவரை, விண்ணப்பதாரர் சென்னை மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

இதற்கான வயது வரம்பை பொறுத்தவரை, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக, 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக  34 வயதுக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சென்னை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்கள் இவ்வலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.09.2026 மாலை 5.45 க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலமாக மட்டுமே கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மண்டல புள்ளி இயல் இணை இயக்குநர், மண்டல புள்ளி இயல் அலுவலகம், பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறை, பழைய கட்டிடம், தரைத்தளம், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை சென்னை-600 006 என்ற முகவரிக்கு செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. அலுவலக உதவியாளர் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. அலுவலக உதவியாளர் பணிக்கான வயது வரம்பு என்ன?

01.07.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.09.2026 மாலை 5.45 மணிக்குள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்றடைய வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES