SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

+12, டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: ரூ.38,741 - ரூ.1,71,597 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

CPCB Recruitment 2026: கங்கை நதி தொடர்பான ஒரு திட்டத்திற்காக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 28, 2026, 11:49 IST | Updated: Aug 28, 2026, 12:01 IST
Image Credit: CPCB Recruitment 2026 (Representative Photo: AI Image)
Join

CPCB Recruitment 2026: மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு முக்கிய தகவல் உள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) பணிபுரிய ஒரு சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விஞ்ஞானி (Scientist), உதவி மேலாளர், நிர்வாக உதவியாளர், அறிவியல் உதவியாளர், தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் (Data Entry Operator) மற்றும் கள உதவியாளர் (Field Assistant) உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை CPCB அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு cpcb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

CPCB Recruitment 2026: முக்கிய அம்சங்கள்

அம்சம்விவரம்
நிறுவனம்மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB)
அறிவிக்கை எண்02/ WQM-II/ 2025- Admin.(R)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்51
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்ப செயல்முறை தொடக்கம்24.08.2026
விண்ணபிக்க கடைசி நாள்07.09.2026

மேலும் படிக்க | Bank Of Baroda-வில் வேலை! ரூ.85,920 வரை சம்பளம்! எப்படி விண்ணப்பிப்பது?

51 பணியிடங்கள்

கங்கை நதி தொடர்பான ஒரு திட்டத்திற்காக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அதிகபட்சமாக 'அறிவியல் உதவியாளர்' (Scientific Assistant) பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பதவி வாரியான காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகிய தகவல்களை இங்கே காணலாம்.

1. விஞ்ஞானி-D (Scientist-D)

பதவி: விஞ்ஞானி-D
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.1,71,597
வயது வரம்பு: 50 வயது

கல்வித் தகுதி:

2. விஞ்ஞானி-C (Scientist-C)

பதவி: விஞ்ஞானி-C
காலியிடங்கள்: 08
சம்பளம்: ரூ.1,48,997
வயது வரம்பு: 45 வயது

கல்வித் தகுதி:

3. விஞ்ஞானி-B (Scientist-B)

பதவி: விஞ்ஞானி-B
காலியிடங்கள்: 12
சம்பளம்: ரூ.1,25,380
வயது வரம்பு: 35 வயது

கல்வித் தகுதி:

மேலும் படிக்க | அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 25,000 காலியிடங்கள், ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

4. உதவி மேலாளர் (நிதி): Assistant Manager (Finance)

பதவி: உதவி மேலாளர் (நிதி)
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ.1,19,272
வயது வரம்பு: 35 வயது

கல்வித் தகுதி:

5. நிர்வாக உதவியாளர்: Administrative Assistant

பதவி: நிர்வாக உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.77,654
வயது வரம்பு: 35 வயது

கல்வித் தகுதி:

6. அறிவியல் உதவியாளர்: Scientific Assistant

பதவி: அறிவியல் உதவியாளர்
காலியிடங்கள்: 13
சம்பளம்: ரூ.77,654
வயது வரம்பு: 35 வயது

கல்வித் தகுதி:

7. வகைப்பாட்டியலாளர்: Taxonomist

பதவி: வகைப்பாட்டியலாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.65,031
வயது வரம்பு: 35 வயது

கல்வித் தகுதி:

8. தரவு உள்ளீட்டுப் பணியாளர்: Data Entry Operator

பதவி: தரவு உள்ளீட்டுப் பணியாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.57,498
வயது வரம்பு: 32 வயது

கல்வித் தகுதி:

9. கள உதவியாளர்: Field Assistant

பதவி: கள உதவியாளர்
காலியிடங்கள்: 08
சம்பளம்: ரூ.38,741
வயது வரம்பு: 27 வயது

கல்வித் தகுதி:

CPCB Recruitment 2026: தேர்வு செயல்முறை என்ன?

தகுதி மற்றும் அனுபவ நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், நேர்காணல் அல்லது எழுத்துத் தேர்வுக்காக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் (CPCB) அழைக்கப்படுவார்கள். இச்செயல்முறையில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் முதலில் விண்ணப்பிக்கும் நடைமுறையை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 7, 2026 ஆகும். நேர்காணல்கள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களை மண்டல அலுவலகங்களிலோ (லக்னோ, கொல்கத்தா, சண்டிகர்) அல்லது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திலோ பணியமர்த்தும் உரிமையை வாரியம் கொண்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | சாகித்ய அகாடமியில் வேலை: 10, 12, ஐடிஐ, டிகிரி... அனைவருக்கும் வாய்ப்பு, ரூ.18,000 – ரூ.2,08,700 சம்பளம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES