SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

12-ஆம் வகுப்பு முடித்தவரா? தருமபுரி மகளிர் திட்டத்தில் 74 காலிப்பணியிடங்கள்

Dharmapuri Jobs : 12 ஆம் வகுப்பு முடித்த பெண்களாக இருந்தால் தருமபுரி மகளிர் திட்டத்தில் 74 காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Sep 21, 2026, 20:49 IST | Updated: Sep 21, 2026, 20:55 IST
Image Credit: Dharmapuri Jobs
Join

Dharmapuri Jobs : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் தருமபுரி மாவட்டத்தில் 74 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் (CBC) தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) அலுவலகத்திற்கு 25.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். உதவிக்குழு ஊக்குநராக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் சமுதாயம் சார்ந்த அமைப்பு பணியாளராகவோ அல்லது தனியார் நிறுவனங்களில் முழுநேரப் பணியாளராக பணியில் இருத்தல் கூடாது. தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சார்ந்தவராக இருத்தல் அவசியம்.

மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும். (உரிய தகுதிகளுடன் இலக்கு மக்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில், பிற விண்ணப்பதாரர்களை கருத்தில் கொள்ளலாம்) விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும்.

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் கணக்கிடும் திறன் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். வாராக் கடன் உள்ள குழுவின் உறுப்பினராக இருக்க கூடாது. மலைப் பகுதிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாத நிலையில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதர தகுதிகளுடன் இருப்பின் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் தகுதியுடையவர்களாக கருதப்படலாம்.

தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம். கணினி திறன் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் உள்ள இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆண்ட்ராய்டு (Android) கைபேசி வைத்திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் Whatsapp-ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.

தருமபுரியில் 9 நபர்களும், அரூரில் 7 நபர்களும், காரிமங்கலத்தில் 8 நபர்களும், மொரப்பூரில் 6 நபர்களும், நல்லம்பள்ளியில் 11 நபர்களும், பாலக்கோட்டில் 13 நபர்களும், பாப்பிரெட்டிப்பட்டியில் 2 நபர்களும், பென்னாகரத்தில் 8 நபர்களும், ஏரியூரில் 4 நபர்களும் மற்றும் கடத்தூரில் 6 நபர்கள் என மொத்தம் 74 நபர்கள் வட்டாரம் வாரியாக சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தலா ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு மதிப்பூதியமாக ரூ.2,500 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES