CA படித்தவர்களுக்கு குட் நியூஸ்! வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு..முழு தகவல் இதோ..
ICAI நிறுவனம், சிங்கப்பூர் பட்டய கணக்காளர் நிறுவனத்துடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தை முழு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்திய பட்டய கணக்காளர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்முறை அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பட்டய கணகாளர் நிறுவனமான ICAI மற்றும் சிங்கப்பூர் பட்டயக்கணக்காளர் நிறுவனமான ISCA ஆகியவை, பரஸ்பர அங்கீகார ஒப்பந்தமான Mutual Recognition Agreementஆன (MRA)வை முழுதாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக இந்தியாவில் CAவாக (பட்டய கணக்காளர்களுக்கு) சிங்கப்பூரில் விரிவான தொழில்முறை அங்கீகாரம் விரைவில் கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடிதங்கள் பரிமாற்றம்:
இந்த இரு நிறுவனங்களின் தொழில்முறை தகுதிகளை அங்கீகரிக்கும் இந்த ஒப்பந்ததை இறுதி செய்து, தங்களின் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி நிறுவனங்கள் இரண்டும், பரஸ்பரம் கடிதங்களை பரிமாறிக்கொண்டன.
சுமார் மூன்று ஆண்டுகளாக (2023ல் இருந்து) நடைப்பெற்று வரும் இந்த ஆலோசனைகளின் தொடர்ச்சியாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிங்கப்பூர் பட்டயக்கணக்காளர்கள் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதை தவிர, கணக்கியல் துறையில், செயற்கை நுண்ணறிவு திறன்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் இணைந்து செயல்படுவதற்கு இந்த இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம், இறுதி செய்யப்படும் பட்சத்தில், இந்திய பட்டயக் கணக்காளர்களுக்கு சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான வாய்ப்புகளும், தொழில்முறை அங்கீகாரமும் எளிதில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னர், 2023 பிப்ரவரி மாதத்தில், ISCA அமைப்பு, ICAI தகுதியை தங்களின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை தகுதிகள் எனும் பட்டியலில் சேர்த்தது. இதன் மூலமாக, தகுதி பெற்ற இந்தியாவில் இருக்கும் CA படித்தவர்கள் ISCAவின் இணை உறுப்பினராக மட்டுமே சேர முடிந்தது. ஆனால், இனி மேற்கொள்ளப்பட இருக்கும் முழு MRA ஒப்பந்தம், இரு நாடுகளின் உறுப்பினர்களுக்கும் முழு உறுப்பினர் அங்கீகாரத்தை வழங்கும் விரிவான கட்டமைப்பாக அமையலாம்.
தற்போதைய தரவுகளின்படி, ICAIல் 4/67 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதே போல, தற்போது வெளிநாட்டுத் தொழில்முறை அமைப்புகளுடன் எட்டு தகுதிப் பரஸ்பர ஒப்பந்தங்களையும் (MRAs) மற்றும் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது. தற்போது முன்மொழியப்பட்ட MRA ஒப்பந்தம் தனிப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது இரு நிறுவனங்களுக்கு இடையேயான தொழில்முறை விவாதங்களுக்கு உட்பட்டதாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு:
இந்த ஒப்பந்த முயற்சிகளுடன், செயற்கை நுண்ணறிவான AI துறையிலும், இணைந்து பணியாற்ற இரு அமைப்புகளும் திட்டமிட்டிருக்கின்றன. இது குறித்த பல்வேறு முயற்சிகளை ஏற்கனவே சிங்கப்பூர் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் ஏற்கனவே ஏஐ துறையில் எடுத்துள்ளது. இதன் மூலம், சுமார் 50,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும், 150க்கும் மேற்பட்ட ஜிபிடி சார்ந்த கருவிகளை, உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Sarvam AI நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு சிங்கப்பூரின் ISCA நிறுவனம் 4.67 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டு விளக்குகிறது.
ISCA நிறுவனம், தற்போது 4,67,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டதாக இருக்கிறது. தன்னுடைய சர்வதேச வணிக கூட்டாண்மைகளை விரிவுப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம், ஏற்கனவே பல வெளிநாட்டு தொழில்முறை அமைப்புகளுடன், எட்டு பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களையும், 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருக்கிறது.
AI Fluency Programme:
சிங்கப்பூர் பட்டய கணக்காளர்கள் நிறுவனம், இந்த துறையை சேர்ந்தவர்களுக்கு என்று தனியாக AI Fluency programme என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இரு நிறுவனங்களை சேர்ந்த பணிக்குழுக்களும், ஒன்றிணைந்து கணக்கியல் துறையில் AI திறன்களை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு பணிகளை ஆராய்ந்து வருகின்றன.