SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இன்றே கடைசி நாள்! இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..

IOB Recruitment : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், உள்ளூர் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உடனடியாக விண்ணப்பியுங்கள்.

Written By Yuvashree M
Published: Aug 24, 2026, 11:28 AM IST | Updated: Aug 24, 2026, 11:35 AM IST
Join

IOB  Recruitment : சென்னையை, தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)ல் மொத்தம் 250 உள்ளூர் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 24ஆம் தேதியான இன்று வரை மட்டுமே வரவேற்கப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இ்கு தெரிந்து கொள்வோம்.

பணி : Local Bank Officer
காலியிடங்கள் : 250 (தமிழ்நாடு மட்டும் 100)
பணியிடங்கள் : தமிழ்நாடு, மராட்டியம், கர்நாடகம், குஜராத்
சம்பளம் : மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை

தகுதி என்ன?

ஏதாவது ஒரு துறையில், இளநிலை பட்டத்தை பெற்றிருக்க வேண்டும்.
பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

1.8.2026ஆம் தேதியின் படி, 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளின் படி, வயது வரம்பி தளர்வுகள் வழங்கப்படும்.

தேர்வு முறை:

  1. ஆன்லைன் எழுத்துத்தேர்வு
  2. மொழித்திறன் தேர்வு
  3. நேர்முகத்தேர்வு

மேற்கூறிய தேர்வுகளின் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு எப்போது?

இந்த தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்த பிற விவரங்கள் அடங்கிய நுழைவுச்சீட்டு மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டின் தேர்வு மையங்கள்:

சென்னை, மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை, வேலூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் எவ்வளவு?

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.175 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல இதர பிரிவினருக்கு ரூ.850 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.iob.bank.in/en/careers எனும் இணையதளத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு:

ஆங்கிலம் மற்றும் இந்தியில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது. ஆங்கில புலமை, தரவுபகுத்தறிவு மற்றும் கணினித் திறன், பொது அறிவு / பொருளாதாரம் / வங்கித் துறை விழிப்புணர்வு, தரவுப் பகுப்பாய்வு மற்றும் விளக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் 200 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 140 கேள்விகளுடன் இந்த தேர்வு நடைபெறும். ஒரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண்கள் குறையும். மொத்தம் 3 மணி நேரம் இந்த தேர்வு நடக்கும். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES