SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8ம் வகுப்பு படித்தவரா? அஞ்சல் துறையில் சூப்பரான வேலை.. மாதம் ரூ.63,000 சம்பளம்

Indian Post Recruitment 2026: இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஞ்சல் துறையில் உள்ள பணிக்கு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Nov 17, 2026, 11:12 IST | Updated: Nov 17, 2026, 11:42 IST
Join

Indian Post Recruitment 2026: இந்திய அஞ்சல் துறை நாட்டில் அதிக ஊழியர்கள் பணியாற்றும் மத்திய அரசு
துறைகளில் ஒன்றாக உள்ளது. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறையில் பல ஆயிரம் ஊரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் சம்பளம், சலுகைகள் என பல உள்ளன. இதனால், தபால் துறையில் வேலை கிடைக்க பலரும் முயற்சி செய்வார்கள். இந்த நிலையில், அஞ்சல் துறை வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் Skilled Artisans/ Tradesmen பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 19 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது தமிழகத்தை இல்லை. மேற்கு வங்கத்தில் மட்டும் தான் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கல்வித்தகுதி, சம்பளம்

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து அந்தந்தத் தொழில் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அந்தந்தத் தொழில் பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.   அதன்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5  ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகளும் வயதும் வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இதனை தெரிந்து கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பிப்பது சிறந்தது. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள்ளூரிலேயே அரசு வேலைவாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை

அஞ்சல் துறையில் Skilled Artisans பணிக்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள்  அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, மெரிட் லிஸ்ட் அடிப்படையில் பணிக்கு  தேர்வு செய்யப்படுவார்கள். மேலும்,  திறன் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

The Senior Manager, Mail Motor Services,139, Beleghata Road, Kolkata – 700015 என்ற முகவரிக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் 1,890 காலிப்பணியிடங்கள்: மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES