Kanchipuram Jobs : காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் காலியாக உள்ள மாநில வளப் பயிற்றுநர் மற்றும் வட்டார வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா வெளியிட்டுள்ளார். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மாநில வளப் பயிற்றுநர் பதவிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது. இப்பணிக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்கு மதிப்பூதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வீதமும், 15 நாட்களுக்கு கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்துதல் பணிக்காக நாள் ஒன்றுக்கு ரூ.750 வீதமும் வழங்கப்படும். மேலும், 15 நாட்களுக்கு தினசரி பயணப்படியாக ரூ.250 அளிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக மாதம் ரூ.25,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
திருப்பெரும்புதூர் வட்டாரத்திற்கான வட்டார வளப் பயிற்றுநர் பணிக்கு 1 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 வீதம் மதிப்பூதியமும், 15 நாட்களுக்கு கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்துதல் பணிக்காக நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதமும் வழங்கப்படும். அத்துடன் 25 நாட்களுக்கான தினசரி பயணப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.60 சேர்க்கப்பட்டு, மாதம் மொத்தம் ரூ.10,500 வரை தொகையாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி: சமூக கல்வி / சமூக அறிவியல் / ஊரக வளர்ச்சி / பெண்கள் கல்வி அல்லது சமூக பாடத்தில் ஏதேனும் ஒரு முதுகலை பட்டம் (Master's Degree).
அனுபவம்: சுயஉதவிக்குழு / கூட்டமைப்பில் பணிபுரிந்த அனுபவம் / பயிற்றுநர் / சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரகப் பணிகளில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 01.10.2026 அன்றைய தேதியின்படி 30 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு முழு நேரக்கல்வி முறையில் பட்டப்படிப்பு (Bachelor's Degree).
அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம்.
வயது வரம்பு: 01.10.2026 அன்றைய தேதியின்படி 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை.
* தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக எழுத, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
* சிறந்த தகவல் பரிமாற்றத் திறன், ஒருங்கிணைப்பு மற்றும் மனித உறவுகளைப் பேணுவதில் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
* கணினியில் MS Word, Excel, இணையப் பயன்பாடு மற்றும் ஸ்மார்ட்போன்/செயலிகளை இயக்கும் போதிய அறிவு அவசியம்.
தேர்வு முறை, பணிக்காலம்
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் (Written Test & Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணிக்காலம்: இப்பொறுப்பு 24 மாத காலவரையறை (2 years tenure) கொண்டது.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து கல்வி மற்றும் பணி அனுபவ சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து, தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காஞ்சிபுரம் மாவட்டம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2026 (மாலைக்குள்). கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம்: https://tncdw.org