SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னை உயர் நீதிமன்றத்தில் 115 காலிப் பணியிடங்கள்.. கைநிறைய சம்பளம்.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Chennai High Court Jobs: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. உயர் நீதிமன்றத்தில் 115 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Written By Umabarkavi K
Published: Sep 24, 2026, 09:23 IST | Updated: Sep 24, 2026, 09:51 IST
Image Credit: Image Source: Chatgpt AI
Join

Chennai High Court Jobs: சென்னை உயர் நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள data entry operator பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 115 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் வேலை

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நீதிமன்ங்களில் உள்ள காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

மாவட்டம்காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை
சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு 02
அரியலூர் 01
சென்னை11 
செங்கல்பட்டு 03 
கோயம்புத்தூர்04 
கடலூர் 02 
தர்மபுரி02 
திண்டுக்கல்02
ஈரோடு02
கள்ளக்குறிச்சி04
காஞ்சிபுரம்03 
கன்னியாகுமரி05 
கரூர்01
மதுரை05
மயிலாடுதுறை01
நாகப்பட்டினம்02
நாமக்கல்01
நீலகிரி01
பெரம்பலூர்02
ராமநாதபுரம்01 
புதுக்கோட்டை01 
சேலம்04
சிவகங்கை01
தென்காசி02
தஞ்சாவூர்03
தூத்துக்குடி06 
திருச்சிராப்பள்ளி05 
திருநெல்வேலி05 
திருப்பத்தூர்01
திருவாரூர்04 
திருவண்ணாமலை04 
திருவள்ளூர்06 
திருப்பூர்02

உள்ளிட்ட மாவட்டங்களில் data entry operator பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 115 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி, சம்பளம்

நீதிமன்றங்களில் data entry operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்ள்  B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT) படித்திருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ECHS Recruitment 2026: 96 காலியிடங்கள், அக்டோபர் 4 விண்ணப்பிக்க கடைசி நாள்

தேர்வு செய்யப்படும் முறை

நீதிமன்றங்களில் data entry operator பணிக்கு எழுத்துத்தேர்வு, skill test, viva மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  எழுத்துத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 10 மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். Skill test தேர்வு 25 மதிப்பெண்களுக்கு நடைபெற வேண்டும். இதில் குறைந்தது 10 மதிப்பெண்கள் பெற வேண்டும். Viva Voce தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் குறைந்தது 20 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

விதிமுறைகள்

மேலும் படிக்க: டிகிரி இருக்கா? ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்: அக்டோபர் 8 முதல் விண்ணப்ப செயல்முறை தொடக்கம்

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  இந்த பணிக்கு செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது ஒரு மாவட்டத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்ப படிவத்தில் உங்கள் விவரங்களை சமர்ப்பித்த பிறகு, அதனை மீண்டும் எடிட் செய்ய முடியாது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை! கடைசி தேதி நீட்டிப்பு..விண்ணப்பிக்க தகுதி என்ன?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES