டிப்ளமோ படித்தவரா? சொந்த ஊரில் தமிழக அரசின் வேலை.. கைநிறைய சம்பளம்
Mayiladuthurai Jobs: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நல சங்கத்தில் 24 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Mayiladuthurai Jobs: மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் (முற்றிலும் தற்காலிக) ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை விரைவுத்தபால் / பதிவுத்தபால் (Speed Post / Registered Post) வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் mayiladuthurai.nic.in என இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மயிலாடுதுறை வேலைவாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலியாக உள்ள மாவட்ட நலச்சங்கம் மூலம் மொத்தம் 24 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, பல்நோக்கு சுகாதார பணியாளர், ஆலோசகர், மகப்பேறு உதவியாளர், குழந்தை நலம் ஆலோசகர், மருந்தாளர், சிகிச்சை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
1) பல்நோக்கு சுகாதார பணியாளர்
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு இது சம்பந்தமான படிப்பில் 2 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள்: 16
மாத சம்பளம்: ரூ.17,500 வழங்கப்படும்.
2) ஆலோசகர் பணி
காலிப் பணியிடங்கள் - 1
கல்வித்தகுதி: உளவியல் / சமூகப் பணி / சமூகவியல் / மானுடவியல் / மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது செவிலியர் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். உளவியலில் முதுகலைப் பட்டம் (MA/MSc) அல்லது சமூகப் பணியில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கலாம். HIV/AIDS தொடர்பான பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.21,000 வழங்கப்படும்.
3) குழந்தைகள் நலம் ஆலோசகர் பணி
காலிப் பணியிடங்கள் - 1
கல்வித்தகுதி - M.Sc / B.Sc சமூகப் பணி / பொது நிர்வாகம் / உளவியல் / அறிவியல் / மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.21000 வழங்கப்படும்.
4) துணை செவிலியர் பணி
காலிப் பணியிடங்கள்: 1
கல்வித்தகுதி: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி, துணை செவிலியர் மகப்பேறு பயிற்சி முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் கவுன்சிலால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.17,500 வழங்கப்படும்.
5) ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணி
காலிப் பணியிடங்கள் - 1
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பு (Diploma in Medical Laboratory Technology) முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.17,000 வழங்கப்படும்.
6) சிகிக்சை உதவியாளர் பணி
காலிப் பணியிடங்கள் - 2
கல்வித்தகுதி: 2 ஆண்டுகள் நர்சிங் தெரிபி டிப்ளடோ முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம் - ரூ.15,000 வழங்கப்படும்.
7) சிகிச்சை உதவியாளர் பணி
காலிப் பணியிடங்கள் - 1
கல்வித்தகுதி: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டுகள் நர்சிங் தெரபி (D.N.T.) டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம் - ரூ.17000 வழங்கப்படும்.
8) மருந்தாளர் பணி
காலிப் பணியிடம் - 1
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனத்தில் D.Pharm (AYUSH) படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம் - ரூ.18000 வழங்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட நல சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 7-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை 609305 என்ற முகவரியில் விரைவுத்தபால் / பதிவுத்தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
நிபந்தனைகள்
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது ( 11 மாதங்கள்)
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
- பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்கப்படவேண்டும்
- காலிப்பணியிடங்கள் மாறுதலுக்குட்பட்டது
- வகுப்புவாரி இடஒதுக்கீடுமுறை (Communal Roster) பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.