• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! உள்ளூரிலேயே அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! உள்ளூரிலேயே அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Mayiladuthurai Govt Job: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட சமுகநல அலுவலரின் கீழ் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Written ByUmabarkavi K
Published: Nov 22, 2026, 14:46 IST|Updated: Nov 22, 2026, 14:56 IST
joinshare
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! உள்ளூரிலேயே அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Mayiladuthurai Govt Job: தமிழக அரசு மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. குறிப்பாக, துறை வாரியாக எந்தெந்த பணியிடங்கள் காலியாக இருப்பதை அறிந்து, தற்காலிக அடிப்படையில் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  இந்த பணியிடங்கள் குறித்த சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்ப்போம்.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு

சமுக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மயிலாடுதுறை - மிஷன் சக்தி திட்டம் மாவட்ட மகளிர் அதிகார மையம் மகளிருக்கான மத்திய மாநில அனைத்து திட்டங்களின் செயல்பாடு நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் பயன்கள் கண்காணித்திடவும் ஒருங்கிணைந்து சேவைகள் புரிந்திடவும் மாவட்ட சமுகநல அலுவலரின் கீழ் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் மார்ச் 2027 வரை மட்டும் பணிபுரிய கீழ்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி, சம்பளம்

கணக்கு உதவியாளர், PMMVY திட்டத்திற்கான தகவல் தொழில்நுட்ப உதவியாளர், பல்நோக்குப் பணியாளர் என 3 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு: AI மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் 3 நாள் பயிற்சி முகாம்

1) கணக்கு உதவியாளர் பணி

காலியிடங்கள்: 1 பணியிடம்

கல்வித் தகுதி: கணக்கியல் (Accounts) பாடத்தைக் கொண்ட இளங்கலைப் பட்டம் அல்லது டிப்ளமோ, அல்லது கணக்கியல் பிரிவுடன் கூடிய பிற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரு.20,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

2) PMMVY திட்டத்திற்கான தகவல் தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்கள்: 1 பணியிடம்.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்துடன் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) சார்ந்த செயல் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

அனுபவம்: மாநில அல்லது மாவட்ட அளவில், அரசு அல்லது அரசு சாரா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தரவு மேலாண்மை (Data Management), செயல்முறை ஆவணப்படுத்தல் (Process Documentation) மற்றும் இணைய அடிப்படையிலான அறிக்கை வடிவங்களில் (Web-Based Reporting formats) குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.20,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு : 1,695 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

3) பல்நோக்குப் பணியாளர் (MTS)

காலியிடங்கள்: 1 பணியிடம்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: தரவு உள்ளீடு (Data Entry) பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநில அளவிலான (SANKALP: DHEW) அமைப்பின் அலுவலர்கள் வழங்கும் பிற பணிகளையும் செய்ய வேண்டியிருக்கும்.

மாத சம்பளம்: ரூ.12,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2026 ஆகும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்படிவத்தினை mayiladuthurai.nic.in மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், 5-ம் தளம் அறை எண்:524, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை மாவட்டம் என்ற முகவரிக்கு நவம்பர் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால்  04364-212429 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தேர்வு கிடையாது! தமிழக மின்வாரியத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu