SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஊரக வளர்ச்சித்துறையில் வேலை! 10வது வரை படிச்சிருந்தா போதும்..எப்படி விண்ணப்பிப்பது?

10வது வரை படித்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை இருக்கு! இதற்கான தகுதிகள் என்ன? முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Sep 09, 2026, 13:52 IST | Updated: Sep 09, 2026, 14:01 IST
Image Credit: TN Jobs | X Page
Join

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29.9.2026 ஆகும். இந்த வேலைக்கான முழு தகுதி மற்றும் விவரத்தை இங்கு பார்க்கலாம்.

பணியின் பெயர்: பதிவரை எழுத்தர் (Record Clerk)

காலிப்பணியிடங்கள் : 1
தேவையான கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : ஆதி திராவிடர்/ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகியோருக்கு, 18 முதல் 37 வரை இருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவ வீரர்கள் ஆதிதிராவிடர்களுக்கு வயது 18 முதல் 55 வரை இருக்க வேண்டும். இதில், வேறு எந்த அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மேற்கண்ட வயது சலுகையை, பெற இயலாது.
சம்பளம் : ரூ.15,900 முதல் 58,600 வரை

தேர்வு செய்யப்படும் முறை என்ன?

இந்த பணியிடங்களுக்கு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://nilgiris.nic.in/notice_category/recruitment/ எனும் தளத்தில், Recruitment எனும் பிரிவில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பதிவிறக்கிய விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிட்டு தேவையாண ஆவணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சிப்பிரிவு, உதகமண்டலம் - 643001

விண்ணப்ப கட்டணம் : ஆதி திராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ரூ.50 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

குறிப்பு : விண்ணப்பத்தாரர்கள், விண்ணப்பத்திற்கான கட்டணத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் (வளர்ச்சி) பெயரிலான இந்தியன் வங்கி கணக்கு எண் (Indian Bank Account Number: 8038019227)
(IFSC Code. IDIB000S004) ற்க் செலுத்தி, அதற்கான ரசீதினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் எப்போது?

இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள், 29.09.2026 ஆகும்.

நிபந்தனைகள் என்னென்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES