SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

10ம் வகுப்பு படித்தவரா? தமிழக அரசின் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க

Nilgiris Govt Jobs: நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, நீலகிர மாவட்ட அரசுத் தலைப்பின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Sep 05, 2026, 16:17 IST | Updated: Sep 05, 2026, 16:30 IST
Join

Nilgiris Govt Jobs: தமிழக அரசு மாவட்ட வாரியாக பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. குறிப்பாக, மாவட்டங்களில் துறை வாரியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் அரசு துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிகக்ப்பட்டுள்ளது. நீலகிரி மாட்டம் அரசுத் தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஆதிதிராவிடர் குறைவு பதிவறை எழுத்தர் பணியிடத்தை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், அரசு தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஆதிதிராவிடர் குறைவு பதிவறை எழுத்தர் பணியிடத்தை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 31.08.2026 முதல் 29.09.2026 மாலை 5.45 வரை நேரடியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்ட பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அதிகபட்ச வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீடிப்பு செய்யப்படுகிறது. முன்னாள ராணுவ வீரர்கள் 18 வயது 55 வயது வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட பதிவறை எழுத்தர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, வயது ஆதார சான்று ஆகியவைகளுக்கு ஆதாரத்தின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அவர்களின் பெயரிலான இந்தியன் வங்கி கணக்கு எண் (Indian Bank Account Number: 8038019227) செலுத்தி அதற்கான ரசீதினை (IFSC Code. IDIBOO0S004) விண்ணப்பத்துடன் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன அலுவலருக்கு உண்டு. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் இடம் & தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்படி, ஆதிதிராவிடர் குறைவு பதிவறை காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பபடிவம் https://nilgiris.nic.in என்ற நீலகிரி மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.09.2026 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் நேரில் கீழ்க்காணும் முகவரியில் சமர்பிக்க வேண்டும். காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வ), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப்பிரிவு) உதகமண்டலம்-643001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES