SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

10ம் வகுப்பு படித்தவர்களுககு அரசு வேலை.. கைநிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

Ramanathapuram Jobs: ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவறை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் 1 முதல் தொடங்கிய நிலையில், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 03, 2026, 10:35 IST | Updated: Sep 03, 2026, 10:43 IST
Join

Ramanathapuram Jobs: தமிழக அரசு மாவட்ட வாரியாக பல்வேறு காலிப் பணிடங்களை நிரப்பப்படுகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ராமநாதபுரம் வேலைவாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் பதிவறை எழுத்தர் நிலையில் ஏற்பட்டுள்ள ஆதி திராவிடர்(SC) குறைவு பணியிடத்தினை பூர்த்தி செய்யும்/நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.09.2026 முதல் 30.09.2026 மாலை 5.45 மணி வரை நேரிலோ/தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்ள் 18 வய முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.  மாற்றுத்திறனாளிகள் அதிகப்பட்டி வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  முன்னாள ராணுவ வீரர்கள் 18 வயது முதல் 55 வயதுககு  இருக்க வேண்டும். பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

இந்த பணிக்கு செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணபத்தினை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

நிபந்தனைகள்

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணிக்கு காலிப்பணிடத்திற்கான விண்ணப்ப படிவம் https://ramanathapuram.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணபத்தினை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES