சிவகங்கை: மாதம் ரூ.58,000 சம்பளம்.. 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
Sivaganga Jobs: சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாத சம்பளமாக அதிகபட்சம் ரூ.58,000 வழங்கப்படும்.
Sivaganga Jobs: சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில்,ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் பதிவறை எழுத்தர் நிலையில் ஏற்பட்டுள்ள ஆதிதிராவிடர்(SC) குறைவு பணியிடத்தினை பூர்த்தி செய்யும்/நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.09.2026 முதல் 30.09.2026 மாலை 5.45 மணி வரை நேரிலோ/தபால் வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிவகங்கை வேலைவாய்பு
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவறை எழுத்தர் பண்ககு பத்தம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிககு 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. பதிவறை எழுத்தர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.58,600 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம்,சாதிச்சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும். (இருப்பிடசான்று தொடர்புடைய வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணபத்தினை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பப்படவேண்டும்.
நிபந்தனைகள்
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
- எந்தவொரு விண்ணப்பத்தினையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன அலுவலருக்கு உண்டு.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகதேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள் நேர்காணல் கடிதம் (Call Letter) மூலம் தனியே அனுப்பிவைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்படி காலிப்பணிடத்திற்கான விண்ணப்ப படிவம் https://sivaganga.nic.in இணையதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணபத்தினை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில்