• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /மாதம் ரூ.2.86 லட்சம் சம்பளம்! வெளிநாட்டில் தமிழக அரசின் வேலை.. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

மாதம் ரூ.2.86 லட்சம் சம்பளம்! வெளிநாட்டில் தமிழக அரசின் வேலை.. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

TN Govt Abroad Jobs: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வாயிலாக, ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய் / அபுதாபி) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு வெளிநாட்டில் ரூ.2.86 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 20, 2026, 14:17 IST|Updated: Nov 20, 2026, 14:41 IST
joinshare
மாதம் ரூ.2.86 லட்சம் சம்பளம்! வெளிநாட்டில் தமிழக அரசின் வேலை.. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Govt Abroad Jobs: தமிழக அரசு வெளிநாடு வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வெளிநாட்டில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வாயிலாக, ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய் / அபுதாபி) பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், சம்பளம் போன்ற விவரத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஐக்கிய அரபு நாடுகளில் வேலை

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக substation/ Power Plant/ Industries துறைகளில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மின்சார உதவியாளர், கருவியியல் தொழில்நுட்ப வல்லுநர், மின்சார பணியாளர்,  மின்சார பொருத்துநர், மின்சார மேற்பார்வையாளர், மின்சார பணி மேற்பார்வையாளர், இயக்கம், பராமரிப்பு பொறியாளர், சோதனை மற்றும் செயல்பாட்டுத் தொடக்கப் பொறியாளர்  என மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.41,040 சம்பளத்தில் CSIR வேலை: எப்படி விண்ணப்பிப்பது?

கல்வித்தகுதி

  • தமிழக அரசின் ஐக்கிய அரபு நாடுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ITI/ Diplomo/B.E/B.Tech/EEE/Instrumental Engineering ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.  
  •  மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • பணி அனுபவத்தை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட துறையில் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வாயிலாக, ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய் / அபுதாபி) வேலைவாய்ப்பு- ஆண் பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople https://t.co/UemDtW7ZrA

— TN DIPR (@TNDIPRNEWS) November 20, 2026

மாத சம்பளம் விவரம்

  • மின்சார உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.32,000 முதல் ரூ.36,000 வரை வழங்கப்படும்.
  • மின் பணியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.36,000 முதல் ரூ.52,000 வரை வழங்கப்படும்.
  • மின்சார பொருத்துநர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.52,000 வரை வழங்கப்படும்.
  • கருவியியல் தொழில்நுட்ப வல்லுநர் ரூ.65,000 முதல் ரூ.1,04,000 வரை வழங்கப்படும்
  • மின்சாரப் பணிமேற்பார்வையாளர் ரூ.65,000 முதல் ரூ.91,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.78,000 முதல் ரூ.1,43,000 வரை வழங்கப்படும்.
  • இயக்கம் மற்றும் பராமரிப்பு பொறியாளர் பணிக்கு ரூ.1,30,000 முதல் ரூ.2,60,000 வரை வழங்கப்படும்.
  • டெஸ்டிங் & கமிஷனிங் இன்ஜினியர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.1,04,000 முதல் ரூ.2,86,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: 3,941 காலியிடங்கள்... 8வது தேர்ச்சியுடன் தமிழ் தெரிந்தால் போதும்

கூடுதல் வசதிகள்..

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கூடுதல் நேரப் பணிக்கு தனி ஊதியமும், விசா மற்றும் தங்குமிடம் நிறுவனத்தால் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், விசா கிடைத்த பின்னர், விமான டிக்கெட் கட்டணம் ரூ.35,400 செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் தங்கள் சுய விவரத்துடன், கல்விச் சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள பணிக்கு டிசம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு உங்கள் சுய விவரம் மற்றும் பிற நகல்களை ovemclnm@gmail.com என்ற இமெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும். பணி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், 044 - 22502267 / வாட்ஸ் அப் எண் 95662 39685 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 8ம் வகுப்பு படித்தவரா? அஞ்சல் துறையில் சூப்பரான வேலை.. மாதம் ரூ.63,000 சம்பளம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu