SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டாம்கோ தொழில் கடன் திட்டம்: ரூ.30 லட்சம் வரை கடன் பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

TAMCO Business Loan: டாம்கோ மூலம் யாரெல்லாம் 30 லட்சம் ரூபாய் வரை தொழில் கடன் பெற முடியும்? என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Aug 08, 2026, 07:41 AM IST | Updated: Aug 08, 2026, 07:47 AM IST
Join

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO - Tamil Nadu Minorities Economic Development Corporation) சார்பில் சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த மக்களின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகக் குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தனிநபர் தொழில் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன், கைவினைஞர்களுக்கான கடன் மற்றும் கல்விக்கடன் எனப் பல வகைகளில் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்கள் குறித்த முழுமையான விதிகளும் வழிகாட்டுதல்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

1. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மதச் சான்று: விண்ணப்பதாரர் இஸ்லாமியர், கிறிஸ்டியன், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி அல்லது ஜெயின் ஆகிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

குடும்ப வரம்பு: ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.

வருமான வரம்பு:

திட்டம் 1: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டம் 2: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. கடன் வகைகள் மற்றும் வட்டி விகிதங்கள்

தனிநபர் தொழில் கடன்:

திட்டம் 1: அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரை கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 6%.

திட்டம் 2: அதிகபட்சமாக ரூ.30,00,000/- வரை கடன் வழங்கப்படும். வட்டி விகிதம்: ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6%.

கைவினைஞர்களுக்கான கடன்:

திட்டம் 1: அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை கடன். வட்டி விகிதம்: ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4%.

திட்டம் 2: அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை கடன். வட்டி விகிதம்: ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5%.

சுய உதவிக்குழு கடன்:

திட்டம் 1: நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- வரை கடன். வட்டி விகிதம் ஆண்டுக்கு 7%.

திட்டம் 2: நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன். வட்டி விகிதம்: ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8%.

கல்விக்கடன்: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் 1: அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரை கடன். வட்டி விகிதம் ஆண்டுக்கு 3%.

திட்டம் 2: அதிகபட்சமாக ரூ.30,00,000/- வரை கடன். வட்டி விகிதம்: மாணவர்களுக்கு 8%, மாணவிகளுக்கு 5%.

3. என்னென்ன தொழில்களுக்கு கடன் கிடைக்கும்?

டாம்கோ கடன் திட்டம் மூலம் சுயதொழில் தொடங்க அல்லது நிலவும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடன் பெறலாம்:

வியாபாரம் மற்றும் வர்த்தகம்: மளிகைக்கடை, ஜவுளிக்கடை, மிதிவண்டி, வாகனப் பழுதுபார்க்கும் மையம், உணவகம், ஸ்வீட் ஸ்டால் போன்றவை.

உற்பத்தி மற்றும் கைவினை தொழில்: ஆடை வடிவமைப்பு, காலணி தயாரிப்பு, ஊறுகாய் மற்றும் அப்பளம் தயாரிப்பு, கூடை முடைதல் போன்ற கைவினைத் தொழில்கள்.

வாகனம், விவசாயம்: ஆட்டோ, சரக்கு வாகனங்கள் வாங்குதல், கறவை மாடுகள் வாங்குதல் மற்றும் விவசாயச் சார்ந்த சிறு தொழில்கள்.

4. தேவையான ஆவணங்கள்

தொழில் கடனுக்குத் தேவையானவை: சாதிச் சான்று, மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, ரேஷன் கார்டு அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கை, வாகனக் கடன் பெற விண்ணப்பித்தால் ஓட்டுநர் உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

கல்விக் கடனுக்கு கூடுதல் ஆவணங்கள்: மாற்றுச் சான்றிதழ், கல்லூரி சான்றிதழ், கல்விக்கட்டண ரசீது, மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள்.

5. விண்ணப்பிப்பது எப்படி?

உங்கள் மாவட்டத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் விண்ணப்பப் படிவத்தைப் பெற வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்.

பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த மனுதாரர்களுக்குக் கடன் தொகையானது நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES