SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிகிரி படித்தவரா? கிராம வங்கியில் 464 காலிப் பணியிடங்கள்.. மாதம் ரூ.80,000 சம்பளம்!

Tamil Nadu Grama Bank Recruitment: தமிழகத்தில் கிராம வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 464 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 07, 2026, 10:30 IST | Updated: Sep 07, 2026, 10:37 IST
Join

Tamil Nadu Grama Bank Recruitment:  கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவைகளை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில், நாடு முழுவதும் கிராம வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கீழ் கிராம வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிராம வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

கிராம வங்கி பணியிடங்கள்

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 29 கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,715 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு கிராம வங்கியில் மட்டும் 464 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

அலுவலக உதவியாளர் பணிக்கு 244 இடங்களும்,  அதிகாரி நிலை 1 பணிக்கு 90 இடங்களும், அதிகாரி நிலை 2 பிரிவில் பொது வங்கி அதிகாரி பணிக்கு 49 இடங்களும், தகவல் தொழில்நுட்ப பிரிவில் 11 இடங்களும், பட்டயக் கணக்காளர் பணிக்கு 2 இடங்களும், சட்டப்பிரிவில் 5 இடங்களும், கருவூல மேலாளர் பணிக்கு 2 இடங்களும், மார்க்கெட்டிங் அதிகாரி பணிக்கு 2 இடங்களும், வேளாண்மை அதிகாரி பணிக்கு  11 இடங்களும் என மொத்தம் 91 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை, மிஸ் பண்ணிடாதீங்க

மேலும், அதிகாரி நிலை 3 என்ற மூத்த மேலாளர் பணிக்கு 48 இடங்களும் நிரப்பப்படுகிறது. இப்படியாக தமிழகத்தில் மொத்தம் 464 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும்  பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.  

அதிகாரி நிலை 1 (உதவி மேலாளர்) ஏதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.  IT, Forestry, Law, Marketing, Agriculture, Economics, Accountancy, Management, Finance உள்ளிட்ட தொடர்புடைய துறைகளில் Degree/Diploma பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதிகாரி நிலை 2 (மேலாளர்) பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்ப மற்றும் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் வங்கியில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

அதிகாரி நிலை 2 (Officer) பணிக்கு IT / Computer Science / Electronics தொடர்பான படிப்பில் பட்டடிப்பு முடித்திருக்க வேண்டும். அதிகாரி நிலை 3 (மூத்த மேலாளர்) பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பொறியியல், டிப்ளோமா, B.Sc Physics படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: SSC 1748 காலியிடங்கள்!!

வயது விவரம்

அலுவலக உதவியாளர் பணிக்கு 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதிகாரி நிலை 1 பணிக்கு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். அதிகாரி நிலை 2 பணிக்கு 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அதிகாரி நிலை 3 மூத்த மேலாளர் பணிக்கு 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்படுகிறது.  எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

மாத சம்பளம்

அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.35,000, அதகாரி நிலை 1 உதவி மேலாளர் பணிக்கு ரூ.60,000, அதிகாரி நிலை 2 மேலாளர் பணிக்கு ரூ.75,000, அதிகாரி நிலை 3 மூத்த மேலாளர் பணிக்கு ரூ.80,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்வது எப்படி?

பணியிடங்களுக்கு ஏற்ப முதன்மை, முதல்நிலை, நேர்முகத் தேர்வு நடைபெறும். அதிகாரி நிலை 1, அலுவலக உதவியாளர் பணிக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் முதல்நிலை தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட முதன்மை தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

கிராம வங்கி பணிக்கு ipbs.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.  இந்த பணிக்கான விண்ணப்பம் செப்டம்பர் 1ஆம் தேதி துவங்கியது.  செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES