• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு: +2 படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலை.. மாதம் ரூ.40,000 வரை சம்பளம்!

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு: +2 படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலை.. மாதம் ரூ.40,000 வரை சம்பளம்!

Tenkasi Govt Job: தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு டிசம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 12,8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 23, 2026, 16:40 IST|Updated: Nov 23, 2026, 16:54 IST
joinshare
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு: +2 படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலை.. மாதம் ரூ.40,000 வரை சம்பளம்!
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

2

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

3

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

4

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

5

AI Courses: ஐஐடி பாட்னாவுடன் கைகோர்த்த டெக்கடமி.. AI, Data Science படிக்க சூப்பர் வாய்ப்பு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tenkasi Government Job: தமிழக அரசு மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பி வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு டிசம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தேசிய ஆயுஷ் குழுமம் மற்றும் தேசிய நலக்குழுமம் திட்டத்தின்கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிகளில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 03.12.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் மொத்தம் 28 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 28 பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை பார்ப்போம்.

மேலும் படிக்க: திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

ஆயுஷ் மருத்துவவ அலுவலர், சித்தா மருத்துவர் பணி

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் ஆயுஷ் மருத்துவ அலுவலர், ஆயுஷ் மருத்துவர் சித்தா, மாவட்ட திட்ட மேலாளர் பணிக்கு தலா ஒன்று என்ற அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி: தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம் (Tamil Nadu Board of Indian Medicine) / TSMC போன்ற மாநில வாரியம் அல்லது கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில்  BSMS பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம் (Tamil Nadu Board of Indian Medicine) / TSMC-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 59 வயது வரை இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: இந்த மூன்று பணிகளுக்கும் ரூ.40,000 வழங்கப்படும்.

உளவியாளர் பணி

காலிப்பணியிடங்கள்: 1

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் குழந்தை பருவ உளவியலாளர் அல்லது குழந்தை உளவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாத சம்பளமாக ரூ.27000 வழங்கப்படும்.

மேலும் படிக்க: சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

தொழிற்சார் சிகிச்சையாளர்

காலிப் பணியிடங்கள்: 1

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொழில்சார் சிசிச்சையில் (Occupational Therapy) இளங்கலை /முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாத சம்பளமாக ரூ.23000 வழங்கப்படும்.

இயன்முறை மருத்தவர் பணி

காலிப் பணியிடங்கள்: 1

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இயன்முறை மருத்துவத்தில் (Physiotherapist) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாத சம்பளமாக ரூ.23000 வழங்கப்படும்.

சுகாதார ஆய்வாளர் பணி

காலிப் பணியிடங்கள்: 9

கல்வித்தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (உயிரியல் / தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்) பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப்பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர்(ஆண்)/சுகாதார ஆய்வாளர்(HI Gr-2)/ துப்புரவு ஆய்வாளர்(SI) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்

வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாத சம்பளமாக ரூ.17500 வழங்கப்படும்.

துணை செவிலியர் பணி

காலிப் பணியிடங்கள்: 3

கல்வித்தகுதி: 18 மாதங்கள் (15.01.2012க்கு முன்) மற்றும் 24 மாதங்கள் (15.01.2012க்கு பின்) பல்நோக்கு சுகாதார பணியாளர் (பெண்)/Auxiliary Nursing Midwife பயிற்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் குழுமத்தில் (Tamil Nadu Nursing Council) பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாத சம்பளமாக ரூ.17500 வழங்கப்படும்.

சிகிச்சை உதவியாளர் பணி

காலிப் பணியிடங்கள்: 3

கல்வித்தகுதி: நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாத சம்பளமாக ரூ.15000 வழங்கப்படும்.

மருத்துவமனை பணியாளர் பணி

காலிப் பணியிடங்கள்: 4

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாத சம்பளமாக ரூ.11000 வழங்கப்படும்.

நிபந்தனை 

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்) என்றும் எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், இலத்தூர்-627 803 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். டிசம்பர் 3ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை தென்காசி மாவட்ட tenkasi.nic.in/notice_category/recruitment/ வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால்(Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! உள்ளூரிலேயே அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu