Thoothukudi Job: தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட ஒப்பந்த அடிப்படை பணியிடங்களுக்கு தொகுப்பூதிய முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 7 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பணி குறித்த விவரத்தை பார்ப்போம்.
காலிப் பணியிடம்: 2
கல்வித்தகுதி: சிகிச்சை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு நர்சிங் தெரபி பட்டயம் (DNT) முடித்திருக்க வேண்டும்.
பணியிடம் விவரம்: அரசு தலைமை மருத்துவமனை, விளாத்திகுளம்.
மாத சம்பளம்: ரூ.15,000
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் - 1
கல்வித்தகுதி: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு நர்சிங் தெரபி பட்டயம் (DNT) முடித்திருக்க வேண்டும்.
பணியிடம்: ஆரம்ப சுகாதார நிலையம், பிச்சிவிளை
மாத சம்பளம் : ரூ.17,000
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: 1
பணியிடம்: ஆரம்ப சுகாதார நிலையம், குளத்தூர்
கல்வித்தகுதி: இளங்கலை சித்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை (BSMS) படித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.40,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடம்: 1
பணியிடம்: ஆரம்ப சுகாதார நிலையம், ஆத்தூர்
கல்வித்தகுதி: மருந்தாளம் பட்டயம் முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.18,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 59 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: 2
பணியிடம்: ஆரம்ப சுகாதார நிலையம், கீழச்செக்கரக்குடி, ஆரம்ப சுகாதார நிலையம், வேப்பலோடை
கல்வித்தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.11,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேற்காணும் பதவிகளுக்கான விண்ணப்பம், கல்வித்தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (https://thoothukudi.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி-628 002 என்ற முகவரிக்கு டிசம்பர் 4ஆம் தேதிக்குள் தபால் மூலமோ அல்லது நேரிலோ வழங்க வேண்டும்.