• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

DMK MK Stalin On Delimitation Bill: நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இதற்கு திமுக ஆதரவாக அளிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறியுள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Nov 27, 2026, 12:49 IST|Updated: Nov 27, 2026, 13:14 IST
joinshare
தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

2

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

3

தூத்துக்குடி: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

4

தமிழகத்திற்குப் புதிய விரைவுச் சாலைகள் இல்லை: மத்திய அரசு அதிரடி முடிவு – பின்னணி என்ன?

5

லீவுக்கு ஊருக்கு வந்தவர் கொலை... பிரபல ரவுடியின் கொடூரச் செயல் - குமரியில் நடந்தது என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Delimitation Bill: நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு ஆதரவா?

திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, "தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான். நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்.

  • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது.
  • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது.

எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது" என கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!

— M.K.Stalin (@mkstalin) November 27, 2026

நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30ஆம் தேதி துவங்கப்பட உள்ள நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நவம்பர் 28ஆம் தேதியான நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதனால், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
MK Stalin