SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தூத்துக்குடி: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Thoothukudi Government Job: தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தூத்துக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 27, 2026, 12:13 IST | Updated: Nov 27, 2026, 13:04 IST
Join

Thoothukudi Job: தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட ஒப்பந்த அடிப்படை பணியிடங்களுக்கு தொகுப்பூதிய முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 7 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பணி குறித்த விவரத்தை பார்ப்போம்.

1) சிகிச்சை உதவியாளர் பணி

காலிப் பணியிடம்: 2

கல்வித்தகுதி: சிகிச்சை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு நர்சிங் தெரபி பட்டயம் (DNT) முடித்திருக்க வேண்டும்.

பணியிடம் விவரம்: அரசு தலைமை மருத்துவமனை, விளாத்திகுளம்.

மாத சம்பளம்: ரூ.15,000

வயது வரம்பு: 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: வேலை தேடுபவரா? சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

2) சிகிச்சை உதவியாளர் (பெண்- NRHM யோகா)

காலிப் பணியிடங்கள் - 1

கல்வித்தகுதி: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு நர்சிங் தெரபி பட்டயம் (DNT) முடித்திருக்க வேண்டும்.

பணியிடம்: ஆரம்ப சுகாதார நிலையம், பிச்சிவிளை

மாத சம்பளம் : ரூ.17,000

வயது வரம்பு: 59 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3) ஆயுஷ் மருத்துவ அதிகாரி

காலிப் பணியிடங்கள்: 1

பணியிடம்: ஆரம்ப சுகாதார நிலையம், குளத்தூர்

கல்வித்தகுதி: இளங்கலை சித்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை (BSMS) படித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.40,000 வழங்கப்படும்.

வயது வரம்பு: 59 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க: கல்வித்தகுதி கிடையாது.. மாதம் ரூ.52,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. தமிழக அரசு அதிரடி

4) மருந்தாளர்  பணி

காலிப் பணியிடம்: 1

பணியிடம்: ஆரம்ப சுகாதார நிலையம், ஆத்தூர்

கல்வித்தகுதி: மருந்தாளம் பட்டயம் முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.18,000 வழங்கப்படும்.

வயது வரம்பு: 59 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5) ஆயுஷ் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணி

காலிப் பணியிடங்கள்: 2

பணியிடம்: ஆரம்ப சுகாதார நிலையம், கீழச்செக்கரக்குடி, ஆரம்ப சுகாதார நிலையம், வேப்பலோடை

கல்வித்தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,000 வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்காணும் பதவிகளுக்கான விண்ணப்பம், கல்வித்தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (https://thoothukudi.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி-628 002 என்ற முகவரிக்கு டிசம்பர் 4ஆம் தேதிக்குள் தபால் மூலமோ அல்லது நேரிலோ வழங்க வேண்டும்.

நிபந்தனைகள்

மேலும் படிக்க: பெருநகர சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு: 130 காலியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES