மாவட்ட குழந்தைகள் உதவி நிலையத்தில் வேலை! தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
திருவள்ளூர் மாவட்ட, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் உதவி நிலையத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு குறித்த செய்தியை இங்கு தெரிந்து கொள்வோம்.
திருவள்ளூர் மாவட்டம் : குழந்தைகள் பாதுகாப்பு திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் உதவி மையம் நிலையத்திற்கு, வழக்கு பணியாளர் (Child Help Desk), திருவள்ளூர் ரயில் நிலையம் மேற்பார்வையாளர் பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி : மாவட்ட குழந்தைகள் உதவி மையம் வழக்கு பணியாளர்கள்.
- பணியிடங்களின் எண்ணிக்கை : 2
- கல்வித்தகுதி மற்றும் அனுபவம் :
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்/சமூகவியல் / சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கணினித்துறையில் தேர்ச்சி மற்றும் அவசர உதவி எண்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- வயது வரம்பு : 42 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க கூடாது.
- மதிப்பூதியம் : ரூ.18,000 வரை
பதவி : சைல்ட் ஹெல்ப் டெஸ்க் திருவள்ளூர் ரயில் நிலையம்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம் : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்/சமூகவியல்/சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினித்துறையில் தேர்ச்சி மற்றும் அவசர உதவி எண்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அவழங்கப்படும்.
வயது வரம்பு : 42 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது.
மதிப்பூதியம்: ரூ.21,000.
விண்ணப்பிப்பது எப்படி?
- https://tiruvallur.nic.in/ எனும் இணையதளத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
- விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி, அதில் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ஒட்ட வேண்டும்.
- உங்கள் கையெழுத்து, தேதி, இடம் என அனைத்தையும் குறிப்பிட்டு அதனை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
D பிளாக், எண் . 118, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
திருவள்ளூர் - 602 001
தொலை பேசி எண் : 044-27665595
குறிப்பு : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன், 21.09.2026 அன்று, மாலை 5.45 மணிக்குள்ளாக மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.