SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. எப்படி பெறுவது?

TN Govt Announcement: மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வித் தொகை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நவம்பர் 9ஆம் தேதி நீடித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 28, 2026, 09:26 PM IST | Updated: Oct 28, 2026, 09:33 PM IST
Join

TN Govt Announcement: தமிழக அரசு கல்லூரி  மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஏழை, எளிய மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்ற கல்வி கற்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசு வழங்கி வருகிறது. 2026-27ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித் இருக்கிறது.

கல்வி உதவித்தொகை திட்டம்

தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு தலா ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற 15.10.2026 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுரை: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசின் சூப்பர் வேலை.. மாதம் ரூ.25,000 சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ரூ.36 லட்சம் உதவித்தொகை யார் பெறலாம்?

மேலும் படிக்க: இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை: டிகிரி பொதும்.... எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிக்கலாம்?

வெளிநாட்டில் கல்வி கற்க விரும்புபவர்கள் இந்த உதவித்தொகையினை பெற www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர், மாணவிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: AI கருவி! பங்குச்சந்தை ஆய்வின் புதிய ஹீரோ... Kwala Intel-ல் என்ன ஸ்பெஷல்?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1.ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகையை யார் பெறலாம்?

தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு படிக்க இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இளங்கலைப் படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

2. இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

2026-27ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அக்டோபர் 15, 2026 கடைசி தேதி, தற்போது நவம்பர் 9, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3.தமிழக அரசின் வெளிநாட்டு கல்வி உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES