ரூ.1.25 லட்சம் உதவித்தொகை.. பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு.. எப்படி பெறலாம்?
TN Govt Education Assistance: மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொக பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
TN Govt Education Assistance: மத்திய, மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் ஆட்சியர் கவிதா அறிவித்துள்ளார். எனவே, எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை
ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர் மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI-Top class education in schools for OBC,EBC & DNT students) வருகிறது.
2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoalrship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top Class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ /மாணவியர்ககள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்/புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை
- இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 -10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000 வழங்கப்படும்.
- 11-12ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1.25,000 வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும் என தெரிவிக்ப்பட்டுள்ளது.
- 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் என்னென்ன?
- மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- வருமான வரம்பை பொறுத்தவரை, குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- 2005-26 ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்று தேசிய உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பித்தல் (Renewal)
இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-20) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும், 12 ஆம் வகுப்பு விண்ணப்பித்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதி செய்து (National Scholarship portal (https://scholarships.gov.in)) புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து 31.08.2026 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல்-for Renewal) கடைசி நாள்: 15.09.2026 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விண்ணப்பதாரர்கள்
(2026-27) புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அறிந்துக் கொள்ளலாம்.
தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்டஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மட்டுமின்றி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.