தேர்வு கிடையாது! தமிழக மின்வாரியத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?
Tangedco Recruitment: தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக மின்வாரிய பணிக்கு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த விவரம், விண்ணப்பிப்பது எப்படி போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Tangedco Recruitment: தமிழக அரசு துறை ரீதியாக காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு துறையிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்வாரியத்தில் 500 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் டிப்ளமே பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மின்வாரியத்தில் மொத்தம் 500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 28ஆம் தேதி கடைசி நாளாகும்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் பட்டயப் பயிற்சி (Technician Diplomo Apprentices) பணியிடங்கள் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, Electrical and electronics Engineering பணியிடங்களும் 455 பணியிடங்களும், Electronics and communication engineering பணிக்கு 35 பணியிடங்களும், computer engineering/ Information Technology பணிக்கு 10 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி, சம்பளம்
தமிழ்நாடு மின்வாரியத்தில் பட்டயப் பயிற்சி பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோவில் இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான வழிகாட்டுதல்களின்படி, வயது வரம்பு பின்பற்றப்படும். இதற்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.10,900 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
1973-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தொழிற்பழகுநர் சட்டத்தின்படி (Apprenticeship Act), இப்பயிற்சிக் காலம் ஓராண்டு வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே சட்டத்தின் கீழ் ஏற்கனவே NATS 2.0 அல்லது NAPS தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றவர்கள், தற்போது பயிற்சி பெற்று வருபவர்கள், PMIS இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் ஓராண்டு அல்லது அதற்கு மேல் பணி அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்களின் முதற்கட்டப் பட்டியலைத் தயார் செய்யும் பணியை தென் மண்டல தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் (BoAT - SR) மேற்கொள்ளும். சம்மந்தப்பட்ட பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைக் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்படும்.
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் அனுப்பப்படும். தொடர்ந்து, அவர்கள் TNPDCL அலுவலகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022, 2023, 2024,2025,2026 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
மின்வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர், tamil nadu power distribution corporation limited என்பதை டைப் செய்து அதன் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 28ஆம் தேதி கடைசி நாளாகும் என கூறப்பட்டுள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. தமிழ்நாடு மின்வாரியத்தில் எத்தனை காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?
மின்வாரியத்தில் பட்டயப் பயிற்சி (Technician Diploma Apprentices) பிரிவின் கீழ் மொத்தம் 500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 2022 முதல் 2026 வரையிலான ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும்.
2. இப்பயிற்சிப் பணிக்கு எவ்வளவு ஊக்கத்தொகை?
தேர்வாகும் நபர்களுக்கு ஓராண்டு பயிற்சிக் காலத்திற்கு மாதம் ரூ.10,900 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதற்கு எழுத்துத் தேர்வு கிடையாது.
3. இப்பணியிடங்களுக்கு எப்படி, எப்போதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்து, அதில் "Tamil Nadu Power Distribution Corporation Limited" என்பதைத் தேர்ந்தெடுத்து நவம்பர் 28-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.