தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை: சென்னையில் ஆட்சேர்ப்பு - டிகிரி / டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
TNMVMD Recruitment 2026: சென்னையிலுள்ள தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை (TNMVMD), 2 பிரிவுகளின் கீழ் மொத்தம் 79 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதில் இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) / வாகனப் பொறியியல் (Automobile Engineering) துறைகளில் பட்டதாரி பயிற்சிப் பணியாளர் மற்றும் டிப்ளோமா பெற்ற தொழில்நுட்பப் பயிற்சிப் பணியாளர் ஆகிய பதவிகள் அடங்கும்.
TNMVMD Recruitment 2026: தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை (TNMVMD), பட்டதாரி பயிற்சிப் பணியாளர் (Graduate Apprentice) மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிப் பணியாளர் (Technician Apprentice) உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 29 செப்டம்பர் 2026 அன்று தொடங்கியது. இது 29 அக்டோபர் 2026 அன்று நிறைவடையும். விண்ணப்பதாரர்கள் nats.education.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
TNMVMD Recruitment 2026: முக்கிய அம்சங்கள்
| அம்சம் | விவரம் |
| நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை (TNMVMD) |
| பதவியின் பெயர் | பட்டதாரி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிப் பணியாளர்கள் (Apprentices) |
| கல்வித் தகுதி | B.Tech/B.E, டிப்ளோமா (Diploma) |
| பணியிடங்கள் | 79 |
| ஊதியம் | மாதம் ₹10,900 - ₹12,300 |
| விண்ணப்ப செயல்முறை தொடங்கிய தேதி | 29-09-2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 29-10-2026 |
TNMVMD Recruitment 2026: முக்கிய விவரங்கள்
இப்பணியிடங்கள் சென்னையில் உள்ளன. விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பொறியியல்/தொழில்நுட்பப் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும். ஊதியமாக மாதம் ரூ. 10,900 முதல் ரூ. 12,300 வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதிக்கான தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள TNMVMD அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். பதவி வாரியான தகுதிகள், முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இங்கே காணலாம்.
TNMVMD Recruitment 2026: சம்பளம்
- பட்டதாரி தொழிற்பயிற்சி - இயந்திரப் பொறியியல் / வாகனப் பொறியியல்: ரூ. 12,300, 18 காலியிடங்கள்
- தொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளமோ) தொழிற்பயிற்சி - இயந்திரப் பொறியியல் / வாகனப் பொறியியல்: ரூ. 10,900 (61 காலியிடங்கள்)
TNMVMD Recruitment 2026: கல்வித்தகுதி
- பட்டதாரி பயிற்சி - இயந்திரப் பொறியியல் / வாகனப் பொறியியல்: பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் (Regular-Full time)
- தொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளமோ) பயிற்சி - இயந்திரப் பொறியியல் / வாகனப் பொறியியல்: பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (Regular-Full time)
இதர நிபந்தனைகள்
- விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
- 1992 ஆம் ஆண்டு பயிற்சி விதியின் பிரிவு 4-ல் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உடல் தகுதிகள் இருக்க வேண்டும்.
- 1973 ஆம் ஆண்டு பயிற்சி (திருத்த) சட்டத்தின் கீழ் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்போது பயிற்சி பெற்று வருபவர்கள் இதறு விண்ணப்பிக்க முடியாது.
- ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
TNMVMD Recruitment 2026: முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய தேதி: 29 செப்டம்பர் 2026
தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறையில் (TNMVMD) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29 அக்டோபர் 2026
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு: 7 நவம்பர் 2026
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (சென்னை, TNMVMD அலுவலகத்தில்): 23 நவம்பர் 2026
மேலும் படிக்க | வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..
இணைக்க வேண்டிய ஆவணங்கள்
- B.E / B.Tech / டிப்ளோமா தற்காலிகச் சான்றிதழ் (Provisional Certificate) அல்லது ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் (Consolidated Mark Sheet).
- SC/ST/OBC/PwD பிரிவினர் இட ஒதுக்கீடு கோரும் பட்சத்தில், அதற்கான சாதிச் சான்றிதழ்.
- BC/MBC பிரிவினர், அங்கீகரிக்கப்பட்ட படிவத்திலான OBC(NCL) சான்றிதழ்.
TNMVMD Recruitment 2026: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
- முதலில் https://nats.education.gov.in என்ற தேசிய இணையதளத்தில் பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும் (Login).
- விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தனித்துவமான பதிவு எண்ணைப் (Enrollment number) பெறவும்.
- 'Apply against advertised vacancies' (அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தல்) என்ற பிரிவின் கீழ், 'TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE DEPARTMENT' என்று தேடவும்.
- 'Apply' என்பதைக் கிளிக் செய்து, விண்ணப்ப நிலை 'applied' என்று காட்டப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- அதன் பிறகு தற்காலிகச் சான்றிதழ் அல்லது ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலைப் பதிவேற்ற வேண்டும்.
- பின், மதிப்பெண் சதவீதத்தை இணையதளத்தில் சரியாகப் பதிவிடவும்.
விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சி பணியிடங்களுக்கு 29 அக்டோபர் 2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.