• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக தகுதி மதிப்பெண்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக தகுதி மதிப்பெண்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

மாவட்ட நீதிபதி, உரிமையியல் நீதிபதி தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை மதிப்பெண் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 20, 2026, 07:17 AM IST|Updated: Oct 20, 2026, 07:25 AM IST
joinshare
நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக தகுதி மதிப்பெண்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
Image Credit: Tamil Nadu judiciary exam 2026

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இரவு முதல் தீவிரமாக கனமழை பெய்யும் .. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் அப்டேட்!

இரவு முதல் தீவிரமாக கனமழை பெய்யும் .. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் அப்டேட்!

2

RTI மனுக்களுக்கு அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

3

நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக தகுதி மதிப்பெண்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

4

100 நாள் வேலை திட்ட பெண்களுக்கு குட் நியூஸ்! 150 நாட்களாக உயர்வு

5

SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு நீதித்துறை பணியில் மாவட்ட நீதிபதி மற்றும் உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கான நேரடி நியமனத் தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.  

அரசாணை மற்றும் சட்டத் திருத்தப் பின்னணி

தமிழ்நாடு உள்துறை (நீதிமன்றங்கள்-1) சார்பில் கடந்த அக்டோபர் 6, 2026 அன்று கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன் அவர்களால் அரசாணை எண்: 343 வெளியிடப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு (SMW (C) No.2 and 6 of 2024 மற்றும் W.P.(C) Nos.484 and 494 of 2024) தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் பரிந்துரையை ஏற்று, ‘தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணி (பணியமர்த்தல்) விதிகள், 2007’-ன் (Tamil Nadu State Judicial Service Rules, 2007) இணைப்பு I மற்றும் II-ல் திருத்தங்கள் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.  

புதிய தகுதி மதிப்பெண்கள் விவரம்

இந்த அரசாணையின் மூலம் மாவட்ட நீதிபதி மற்றும் உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கான முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு இணையாகக் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.  

1. மாவட்ட நீதிபதி நேரடி நியமனம்:

முதனிலைத் தேர்வு:

1. SC / SCA / ST பிரிவினர்: 30 மதிப்பெண்கள்   
2. BC / BCM / MBC / DNC பிரிவினர்: 35 மதிப்பெண்கள்   
3. மாற்றுத்திறனாளிகள் (PwBD): 30 மதிப்பெண்கள்
4. இதர பிரிவினர்: 40 மதிப்பெண்கள்

முதன்மைத் தேர்வு (Main Exam - ஒவ்வொரு தாளிலும்):

1. SC / SCA / ST பிரிவினர்: 35% மதிப்பெண்கள்   
2. BC / BCM / MBC / DNC பிரிவினர்: 40% மதிப்பெண்கள்   
3. மாற்றுத்திறனாளிகள் (PwBD): 35% மதிப்பெண்கள்
4. இதர பிரிவினர்: 45% மதிப்பெண்கள்

2. உரிமையியல் நீதிபதி நேரடி நியமனம்:

முதனிலைத் தேர்வு:

1. SC / SCA / ST பிரிவினர்: 30 மதிப்பெண்கள்
2. BC / BCM / MBC / DNC பிரிவினர்: 35 மதிப்பெண்கள்
3. மாற்றுத்திறனாளிகள் (PwBD): 30 மதிப்பெண்கள்

இதர பிரிவினர்: 40 மதிப்பெண்கள்  

முதன்மைத் தேர்வு (Main Exam - ஒவ்வொரு தாளிலும்):

1. SC / SCA / ST பிரிவினர்: 30% மதிப்பெண்கள்   
2. BC / BCM / MBC / DNC பிரிவினர்: 35% மதிப்பெண்கள்   
3. மாற்றுத்திறனாளிகள் (PwBD): 30% மதிப்பெண்கள்
4. இதர பிரிவினர்: 40% மதிப்பெண்கள்  

முக்கியத்துவம் மற்றும் பயன்

நீதித்துறைத் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனித் தகுதி மதிப்பெண் இல்லாத நிலை இருந்துவந்த நிலையில், இந்த புதிய விதிமுறையானது தகுதியுள்ள மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக அதிகளவில் தேர்வாக வழிவகுக்கும். சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணை வழக்கறிஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu