நெருங்கும் குரூப் 2 தேர்வு.. TNPSC இலவச பயிற்சி வகுப்புகள்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. குரூப் 2 தேர்வுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில், இந்த வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
TNPSC Free Coaching: தமிழக அரசின் காலிப் பணியடங்களை பெரும்பாலும் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது.
நாளை முதல் குரூப் 2 இலவச பயிற்சி
அந்த வகையில், குரூப் 2 தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. குரூப் 2 தேர்வுக்காக தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில, தமிழக அரசு குரூப் 2 இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group II/IIA தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 09.09.2026 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை, பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்
இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 03.09.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விவரங்களை பின்வரும் கூகுள் படிவத்தில் நிரப்புமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள் https://forms.gle/z3LzaGSpNeA1djJ76.
மேலும், RRB, TNPSC, TNUSRB SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் study hall வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.
மேலும், விவரங்களுக்கு, decgcquindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள். இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு ஆட்சியர மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.
குரூப் 2 தேர்வுக்கு உடனே விண்ணப்பிக்க வேண்டும்
குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் 9ஆம் தேதி நிறைவடைகிறது. எனவே, இணையவழியில் செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் குரூப 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த பட்டியலின, பழங்குடி, மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுகக்கு விலக்கு அளிக்ப்பட்டுள்ளது. tnspscexams.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
குரூப் 2 தேர்வு மூலம் துணைப் பதிவாளர், தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அதிகாரி, நகராட்சி ஆணையர் (நிலை II), தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, சிறைத் துறையில் நன்னடத்தை அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மூத்த வருவாய் உதவியாளர், பேரூராட்சிகளில் செயல் அதிகாரி மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தற்போது நடைபெற உள்ள தேர்வு மூலம் மொத்தம் 821 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தேர்வு நடைபெறுவது எப்படி?
குரூப் 2 தேர்வு கணினி வழித் தேர்வாக நடைபெறும். குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு நவம்பர் 1ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இத்தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு எழுத தகுதியாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.