• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

TNPSC Group 4 Exam: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி நீட்டித்துள்ளது. நவம்பர் 5ஆம் தேதியான இன்றுடன் அவகாசம் முடிவடைந்த இருந்த நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி நீட்டித்து இருக்கிறது. எனவே, குரூப் 4 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 05, 2026, 08:43 AM IST|Updated: Nov 05, 2026, 08:53 AM IST
joinshare
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்..  முழு விவரம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சொந்தமாக 'Food Truck' பிசினஸ் ஆரம்பிக்க ஆசையா? தமிழக அரசின் 2 நாள் சிறப்புப் பயிற்சி

சொந்தமாக 'Food Truck' பிசினஸ் ஆரம்பிக்க ஆசையா? தமிழக அரசின் 2 நாள் சிறப்புப் பயிற்சி

2

சென்னை முருகன் கோவில்களுக்கு ஒருநாள் டூர்... தமிழக அரசு அறிவிப்பு

3

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

4

தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் போடலையா... இதோ Unreserved ரயில்கள் அறிவிப்பு

5

பொங்கலுக்கு 'அண்ணன் சீர்': 60,000 பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் - தேதி விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TNPSC Group 4 Exam: தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் வாரியாக ஆண்டுதோறும் தேர்வர்களை நடத்தி, மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றனது. அந்த வகையில், குரூப் 4 தேர்வு 2027ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி மாதம் நடக்கிறது. இதற்கான லட்சக்கணக்கானோர் தேர்வு எழுத உள்ளனர். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 5ஆம் தேதியான இன்றே கடைசி நாளாகும். இந்த நிலையில், தேவர்களின் நலனுக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி நீட்டித்துள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (தொகுதி 4 பணிகள்) 2026-இற்கான அறிவிக்கை எண் 11/2026, நாள் 06.10.2026 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசாணை (நிலை) எண் 68, மனித வள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 30.10.2026-இல் அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு ஐந்து ஆண்டு காலம் அதனைத் தொடர்ந்து, இத்தெரிவிற்கு உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 08.11.2026 11.59 இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்தியன் வங்கி அப்ரண்டிஸ் பணி நியமனம்: 1500 காலியிடங்கள், விண்ணப்பிப்பது எப்படி?
 

https://t.co/vup6pk8mt9

— TNPSC (@TNPSC_Office) November 4, 2026

குரூப் 4 தேர்வுக்கான முக்கிய நாட்கள்

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு மிகப்பெரிய நுழைவாயிலாக இருப்பது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தான். 2026ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மூலம் 46 பதவிகளில் மொத்தம் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

விண்ணப்பம் தொடங்கிய தேதி - அக்டோபர் 6

இணையவழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் - நவம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை

விண்ணப்பத் திருத்த சாளர காலம் - நவம்பர் 9ஆம் தேதி மதியம் 12.01 மணி முதல் நவம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை

தேர்வு நடைபெறும் நாள், நேரம் - 2027 ஜனவரி 10 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.

மேலும் படிக்க: TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

விண்ணப்பிப்பது எப்படி?

  • தேர்வர்கள் tnpscexams.in என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
  • தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு பிரிவில் பதிவு செய்த பின்பு தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்பத் தொடங்க வேண்டும். தேர்வர்கள் ஒருமுறைப்பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • எந்தவொரு பதவிக்கு விண்ணப்பிக்க  விரும்பும் வேதர்கள், அப்பதவிக்குரிய இடத்தில் Apply என்ற க்ளிக் செய்து,  கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
  • கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை உள்ளிட வேண்டும். மேலும், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவிட வேண்டும்.
  • தேர்வர்கள் இணையவழி விண்ணப்பத்தில பூர்த்தி செய்த பின், விண்ணப்பத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் "SAVE AND PROCEED" என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
  • தேர்வர் இறுதியாக சமர்ப்பி (Submit) என்ற பொத்தானை அழுத்துவதன் வாயிலாகவே அவர் ஒரு பதவிக்கு இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பித்துள்ளார் என கருதப்படும். இதன்பிறகு, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் விவரம்

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இணையவழி  விண்ணப்பத்தில் உரிய விவரங்களைப் பதிவு செய்த பின்னர், விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் தேர்வர் தேர்வுக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேக்கிங் வாயிலாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TNPSC