• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சொந்தமாக 'Food Truck' பிசினஸ் ஆரம்பிக்க ஆசையா? தமிழக அரசின் 2 நாள் சிறப்புப் பயிற்சி

சொந்தமாக 'Food Truck' பிசினஸ் ஆரம்பிக்க ஆசையா? தமிழக அரசின் 2 நாள் சிறப்புப் பயிற்சி

Tamil Nadu Govt Food Truck Training 2026: தமிழ்நாடு அரசு புட் டிரக் பிஸ்னஸ் மற்றும் தங்கும் விடுதி தொழில்கள் தொடர்பான பயிற்சியை வழங்க உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 05, 2026, 08:48 AM IST|Updated: Nov 05, 2026, 08:56 AM IST
joinshare
சொந்தமாக 'Food Truck' பிசினஸ் ஆரம்பிக்க ஆசையா? தமிழக அரசின் 2 நாள் சிறப்புப் பயிற்சி
Image Credit: Tamil Nadu Govt Food Truck Training

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சொந்தமாக 'Food Truck' பிசினஸ் ஆரம்பிக்க ஆசையா? தமிழக அரசின் 2 நாள் சிறப்புப் பயிற்சி

சொந்தமாக 'Food Truck' பிசினஸ் ஆரம்பிக்க ஆசையா? தமிழக அரசின் 2 நாள் சிறப்புப் பயிற்சி

2

சென்னை முருகன் கோவில்களுக்கு ஒருநாள் டூர்... தமிழக அரசு அறிவிப்பு

3

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

4

தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் போடலையா... இதோ Unreserved ரயில்கள் அறிவிப்பு

5

பொங்கலுக்கு 'அண்ணன் சீர்': 60,000 பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் - தேதி விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Govt Food Truck Training 2026: தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில் பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உணவு வணிகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்காக "உணவு டிரக் தொழில் மேம்பாடு" குறித்த 2 நாள் நேரடி அடிப்படைப் பயிற்சி முகாமை அறிவித்துள்ளது.  

மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை : இந்த மாதம் வராதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பயிற்சி எப்போது, எங்கு நடைபெறும்?

இந்தப் பயிற்சி முகாம் வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01, 2026 ஆகிய இரண்டு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்திருக்கும் EDII-TN அலுவலகத்தில் இப்பயிற்சி நடைபெறும்.  

பயிற்சியில் என்னென்ன கற்றுத்தரப்படும்?

ஒரு உணவு டிரக் தொழிலை ஆரம்பிப்பது முதல் வெற்றிகரமாக நிர்வகிப்பது வரை தேவைப்படும் அனைத்து நடைமுறைப் பயிற்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன:  

- உணவு டிரக் வணிக அறிமுகம் மற்றும் வணிகப் பதிவு முறைகள்.   
- அரசு உரிமங்கள் மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகள்.   
- மூலப்பொருட்கள் கொள்முதல், இருப்பு மேலாண்மை மற்றும் விநியோகஸ்தர் மேலாண்மை.   
- நிதித் திட்டமிடல், உணவின் தயாரிப்பு அடக்க விலை கணக்கீடு மற்றும் லாப மேலாண்மை.   
- மனிதவளம் மற்றும் பணியாளர்கள் திட்டமிடல்.   
- மெனு வடிவமைப்பு மற்றும் செய்முறைத் தரப்படுத்தல்.   
- உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், தூய்மை மற்றும் FSSAI சட்ட விதிமுறைகள்.   
- உணவு டிரக் செயல்முறை மாதிரிப் பயிற்சி.   
- வணிகத் திட்டம் தயாரித்தல் மற்றும் விளக்கக்காட்சி.  

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் பிற தகவல்கள்:

18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் இதில் பங்கேற்கலாம்.  

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் அனைவருக்கும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும்.  

வெளியூரிலிருந்து வரும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் தங்கும் விடுதி வசதியும் (முன்னுரிமை அடிப்படையில்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொடர்பு எண்கள்: இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயமாகும். ஆர்வமுள்ளவர்கள் www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகப் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, திங்கள் முதல் வெள்ளி வரை 9080609783, 8668102600, 7806918309 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தங்கும் விடுதி தொழில் தொடங்க அரசு சான்றிதழுடன் பயிற்சி

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், புதிதாக தொழில் தொடங்க விரும்பும் ஆர்வலர்களுக்காக ஒரு நாள் சிறப்புப் பயிற்சி முகாமை அறிவித்துள்ளது. சொந்தமாக பெட் பிரேக்ஃபாஸ்ட் (Bed & Breakfast - BnB / Home Stay) வணிகத்தைத் தொடங்கி நிர்வகிப்பது குறித்து இந்தப் பயிற்சியில் விரிவாகக் கற்றுத்தரப்பட உள்ளது.  

இப்பயிற்சி முகாம் வரும் 18 நவம்பர் 2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை, EDII அலுவலகச் சாலையில் அமைந்துள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் இப்பயிற்சி நேரடியாக நடத்தப்படும்.  

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள 21 வயது பூர்த்தியடைந்த ஆண்களும் பெண்களும் தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்குமிடம் தேவைப்படும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களுக்கு மலிவு விலையிலான விடுதி வசதி 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் செய்து தரப்படும் எனவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பயிற்சியின் போது BnB தொழில் அறிமுகம், உங்களது இடத்தை வணிக ரீதியாக மதிப்பிடுதல், ஆரம்பக்கட்ட முதலீட்டுச் செலவுகள், கட்டணம் நிர்ணயித்தல் மற்றும் பட்ஜெட் திட்டமிடல், வாடிக்கையாளர் சேவை, சுகாதாரம் மற்றும் தினசரி செயல்பாடுகள், இணையதளப் பதிவுகள், மார்க்கெட்டிங் மற்றும் புக்கிங் நடைமுறைகள், அரசுப் பதிவுகள் மற்றும் சட்ட விதிமுறைகள், அத்துடன் ஹோம் ஸ்டே வணிகத்திற்கான விரிவான செயல் திட்டத்தை (Action Plan) தயாரிப்பது உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் குறித்து நிபுணர்களால் விளக்கமளிக்கப்படும்.  

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகப் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்குத் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5 மணிக்குள் 9080609775, 8668102600 மற்றும் 7806918309 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu