தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் அப்பரண்டீஸ் பயிற்சி! சேருவதற்கான தகுதி என்ன?
தமிழ்நாடு அரசின் மாநில போக்குவரத்துக்கழக பணிமனைகளில், அப்ரண்டிஸ் பயிற்சிக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழக அரசின், மாநில போக்குவரத்துக்கழகத்தின் கீழ் செயல்படும் சில மாவட்டங்களின் பணிமனைகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை, சேலம், மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் பணிமனைகளில் பட்டதாரி பயிற்சியாளர்கள், (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத) தொழில்நுட்ப வல்லுநர் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புதான் வெளியிடப்பட்டிருக்கிறது.
தகுதிகள் என்ன?
தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க, பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, பட்டப்படிப்பை முடித்தவர்கள் மற்றும் கலை அறிவியல் பாடங்கைல் இளநிலைப்பட்டம் பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு வரும் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பெயர் : Graduate Apprentice (Engineering)
காலி இடங்கள்: 438
உதவித்தொகை : மாதம் ரூ.12,300
தகுதி : பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில், BE, B.Tech முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர் : Graduate Apprentice (Non-Engineering)
காலி இடங்கள்: 623
உதவித்தொகை : மாதம் ரூ.12,300
தகுதி: கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர் : Diploma Apprentice (டெக்னீஷியன் அப்ரெண்டீஸ்)
காலியிடங்கள் : 457
உதவித்தொகை : மாதம் ரூ.10,900 வரை வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில், சம்பந்தப்பட்ட பிரிவில், முதல் வகுப்பில் டிப்ளாமோ வரை முடித்திருக்க வேண்டும். 2022 முதல் 2026 ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பயிற்சி பெற்றிருப்பவர்கள், பணி அனுபவம் இருப்பவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?
டிப்ளமோ பட்டப்படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுற்கு அழைக்கப்படுவார்கள்.
எப்போது அறிவிப்பு வரும்?
நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் ஆனது, செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இணையதளம் மூலமாக வெளியிடப்படும். இந்த நேர்முகத்தேர்வு நான்காம் வாரம் தொடங்கும். இந்த தேர்வின் போது கேட்கப்படும் அத்தனை சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
www.natucation.gov.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் முறையில், தங்களுடைய தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில், Unique Enrolment Number-ஐ பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருகும் Top Down பட்டனை க்ளிக் செய்து அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தை தேர்வு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள், 28.08.2026 தேதியாகும்.