SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ட்ரோன் பைலட் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு அரசில் தற்காலிக பணி..தகுதி என்ன?

தமிழ்நாடு, ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் நிரப்பப்பட இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 31, 2026, 15:59 IST | Updated: Aug 31, 2026, 16:04 IST
Image Credit: Drone Pilot | X Page
Join

தமிழகத்தில், ட்ரோன் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தொழில்கள் மற்றும் புத்தாக்கத்திற்கான அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு, ஆளில்லா வான்வழி வாகன (ட்ரோன்) கழகத்தின் செயல்பாடுகளை சீராக மேற்கொள்ளவும், ஒப்பந்தகால பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த பணி, ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட இருக்கும் பணியிடங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருப்பவர்கள், வரும் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பங்களை அனுப்பலாம். அவர்கள் செலக்ட் செய்யப்பட்டு, ஒப்பந்த காலத்தின் திருப்திகரமான பணித்திறனை காண்பிக்கும் பட்சத்தில், தனிநபர் பணித்திறன் மற்றும் தேவை அடிப்படையில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வாய்ப்பு உண்டு.

பணி மற்றும் காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் : 36
வேலையின் பெயர் : ட்ரோன் பைலட்
காலியிடங்கள் : 7

பணி: ட்ரோன் கோ பைலட்
காலியிடங்கள் : 7

பணி : ஆ.பி.டி.ஓ., சூப்பர் வைசர்
காலியிடங்கள் : 15

பணி ஓட்டுநர்
காலியிடங்கள் 1

தகுதி என்ன?

10ஆம் வகுப்பு, டிப்ளமோ, பிஇ, பி.டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
ஒவ்வொரு பணிக்கும், வயது வரம்பு மாறுபடும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர், நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள்,  tnuavcorp.com எனும் இணையதாளத்தில் இருக்கும் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அதை தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரில் சென்றோ சமர்ப்பிக்கலாம். அப்படி இல்லையென்றால், விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரிதியை, ceo@tnauavcorp.com அல்லது bdm@tnuavcorp.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Managing Director,
Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation Employment Exchange Office,
42, Alandur Rd, 
Thiru Vi Ka Industrial Estate,
SIDCO Industrial Estate
Guindy, Chennai  - 600032

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 18.09.2026

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES