கனரக வாகனங்கள் ஓட்ட தெரியுமா? தமிழக அரசின் வேலை.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
Trichy Govt Jobs: திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்களேஉ உள்ளன. எனவே, இந்த பணிக்கான முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Trichy Govt Jobs: தமிழக அரசு மாவட்ட வாரியாக பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. இதன் மூலம் காலிப் பணியிடங்களை தமிழக அரசு நிரப்பி வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலக நிர்வாகத்திற்குட்பட்ட தேசிய சுகாதார குழுமத்தின்கீழ் கீழ்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை தொடர்ந்து பணி நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, ஓட்டுநர், microbiologist பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 2 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி, சம்பளம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஓட்டுநர் பணிக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகனங்களை சீர் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் பணிக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.17500 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் Microbiologist பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் MSC Medica Microbiology/microbiology படிப்பை முடித்திருக்க வேண்டும். தொற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியும் சேவைகளில் 2 ஆண்டுகள் ஆய்வகப் பணி அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.44,500 மாத சம்பளமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது(11 மாதங்கள்)
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்பதல் கடிதம்(undertaking) அளிக்க வேண்டும்.
- காலிப்பணியிட விவரம் மாறுதலுக்குட்பட்டது.
- பணிநியமனம் வழங்கப்படும் பணியிடத்தில் தங்கி பணி புரிய வேண்டும். மேலும். பணியிட மாறுதல் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்ப படிவம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (https://tiruchirappalli.nic.in/notice_category/announcements/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (speed post) மூலமாகவே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லுரரி அருகில்,T.V.S. டோல்கேட், திருச்சி - 620020. (District Health Officer, District Health Office, Race Course Road, Jamal Mohamed College Near, T.V.S tollgate, Trichy-020 020) என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை செப்டம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.