SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

25 வயதில் ரூ.1.6 கோடி சொத்து.. மீம்ஸ் உருவாக்கி கோடீஸ்வரரான இளைஞர்!

மீம்ஸ் உருவாக்கியே ஒருவர் ரூ. 1.6 கோடி வரை சொத்து மதிப்பு ஈட்டி இருக்கிறார். இதனை அவர் வெறும் 25 வயதில் சாதித்து காட்டி இருக்கிறார்.

Written By R Balaji
Published: Aug 24, 2026, 05:16 PM IST | Updated: Aug 24, 2026, 05:22 PM IST
Join

சமூக வலைத்தளங்களில் வீணாக நேரத்தை செலவழிக்ககூடாது என பலரும் அடிக்கடி யோசிப்பதுண்டு. அதேபோல், கண்ணில்படும் மீம்களை பார்த்து, இதை உருவாக்கி நேரத்தை வீணடிக்கீறார்கள் என்றும் யோசிப்பதுண்டு. ஆனால், இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீம்கள் உருவாக்கியே ரூ. 1.6 கோடிக்கு சொத்து மதிப்பை ஈட்டி இருக்கிறார்.

25 மதிக்கத்தக்க இளைஞரான அவர் ரெட்டிட் தளத்தில் தனது முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பகிர்ந்துள்ளார். அதில், கண்டெட் உருவாக்கி சோசியல் மீடியாவில் பகிர்வது, இஸ்டாகிராம் மீம் பக்கங்களை நிர்வகிக்கும் டிஜிட்டல் மீடியா மூலமே இந்த சொத்தை ஈட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

18 வயதில் தொடங்கிய பயணம்

தனது 18 வயதில் பார்ட்டைம்மாக ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட தொடங்கி இருக்கிறார். பின்னர் நாளடைவில் சோசியல் மீடியாவின் எதிர்காலத்தை உணர்ந்து முழு நேரமாக செலவிட தொடங்கி உள்ளார். டிஜிட்டல் மீடியா நிறுவனமாக அதை வளர்த்தெடுத்துள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மீம் பேஜ்கள் மூலம் கணிசமாக வருவாயை ஈட்டி வருகிறார்.

வரும் வருமானத்தை சரியான முறையில் முதலீடு அந்த வருமானத்தை பொருக்க தொடங்கி உள்ளார். இதன் மூலமே இவ்வளவு குறுகிய காலத்தில் ரூ. 1.6 கோடி சொத்தை உருவாக்கியதாக அவர் ரெட்டிட் பக்கத்தில் கூறி உள்ளார்.

மேலும், அவரது முதலீடுகளை பிரித்து வைத்திருக்கும் விதம் குறித்தும் அந்த இளைஞர் பகிர்ந்துள்ளார். இந்திய பங்குச்சந்தையில் ரூ. 90 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதேபோல், ரியல் எஸ்டேட் வாங்குவதற்கு மற்றும் அவசர தேவைகளுக்காக அவரது வங்கி கணக்கில் ரூ. 45 லட்சம் வைத்துள்ளதாகவும் பகிர்ந்துள்ளார்.

இதுபோக மியூச்சுவல் ஃபண்டுகளிலும் ரூ. 5 லட்சம் மற்றும் கிரிப்டோகரன்சி, நிலையான வைப்பு நிதி ஆகியவற்றிலும் ரூ. 4 லட்சம் முதலீடு செய்துள்ளார். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 4 லட்சத்திற்கு செகண்ட் ஹெண்ட் கார் ஒன்றையும் வாங்கி உள்ளார்.

ஆனால் ரூ. 50 லட்சத்திற்கான டேர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே எடுத்துள்ளதாகவும், அவருக்கோ அல்லது அவருடைய பெற்றோருக்கோ இன்னும் மருத்துவ காப்பீடு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக என்ன செய்யலாம்?

டிஜிட்டல் பிசினஸ் என்பதால் வருமானத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருவதால், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பதை அந்த இளைஞர் இணைய பயனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். மேலும், வங்கில் இருக்கும் ரூ. 45 லட்சம் பணத்தை எங்கு முதலீடு செய்வது, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் இருக்கும் பிள்ஸ், மைனஸ் என்ன? குறைந்த வயதில் எவ்வாறு ஓய்வு பெறுவது என்பது குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளார். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES