SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திமுக கட்சி பதவிக்கு இனி வயது வரம்பு கட்டாயம்! முன்னாள் அமைச்சர்கள் நிலை என்ன?

திமுகவில், சமீபத்தில் வெளிவந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அவசர செயற்குழுக்கூட்டத்தில் முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 23, 2026, 06:53 AM IST | Updated: Aug 23, 2026, 07:10 AM IST
Join

சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகு கட்சியின் கட்டணம் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் மறு சீரமைப்பு செய்வதற்கும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுக தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பை இழந்ததால் சட்டமன்ற தொகுதி வாரியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையில் தயாரிக்கப்பட்டு மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதை எடுத்து முக்கிய முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டம்:

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த செயற்குழு கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக கள ஆய்வு செய்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் மொத்த நிர்வாகிகளின் ஆலோசனையின் அடிப்படையில் கட்சி குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முக்கியமான 9 தீர்மானங்களை திமுக இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றியது.

இதில் குறிப்பிடத்தக்க வகையில் வருவாய் மாவட்டங்களை அடிப்படை அழகாக கொண்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழகம் மாவட்டம் இந்த பகுதியில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு மாவட்ட கழக செயலாளரின் அதிகபட்ச வயது வரம்பு 70 என நிர்ணயிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது. இதை எடுத்து மாவட்ட கழக செயலாளர் ஆகும் ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே பொறுப்பில் இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி பறிக்கப்படுமா?

தற்போது திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 70 என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் அந்த வயதை எட்டி இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்போகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் பேச்சு:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்குழு கூட்டத்தில் பேசும் போது, “திமுக பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இந்த தேர்தலில்தான் தோல்வியுற்றுள்ளோம், நிரந்தரமாக அல்ல. எதிர்காலத்தை திட்டமிட, நமக்கு காலம் கிடைத்துள்ளது” என்று பேசினார். மேலும், கடந்த தேர்தலில், திமுகவின் தோல்விக்கு திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம் என தெரிவித்தார். அதோடு, இதற்காக சோர்ந்து விடாமல் நம்மை நாமே சுய பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, கட்சியின் நிர்வாக அமைப்பில் ஏற்படப்போகும் மாற்றாங்களை தெரிவித்தார்.

“கசப்பானதாக இருக்கலாம்..”

மு.க.ஸ்டாலின் பேசுகையில் கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களை செய்ய இருப்பதாக அறிவித்ததோடு. இது சிலருக்கு கடுமையானதாகவும், பலருக்கு கசப்பானதாக இருக்கலாம் என்ரும் தெரிவித்தார். இந்த மாறுதல், அடுத்த நூறு ஆண்டுகள் ஆட்சியை உயிர்ப்புடன் இருக்கச்செய்யும் என்றும் உறுதி அளித்தார்.

கம்-பேக் கொடுக்குமா திமுக?

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரை தூங்கி வழிவது சில கட்சிகளின் வழக்கம் என தெரிவித்ததோடு, எதிர்கட்சியாக இருதாலும் உறங்கி விடாமல் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப எயல்படும் கட்சிதான் திமுக என்பதை எதிரிகளும் சொல்வார்கள் என சூழுரைத்தார். பின்னர், கம்-பேக் கொடுப்பதில் நாம்தான் ஸ்பெஷலிஸ்ட் என கூறிய அவர், அதனை சிறப்பாக செய்வோம் என தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES