SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

லஞ்சம் தொடர்பான புகார் அளிக்க..சிறப்பு எண்கள்! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு..

லஞ்சம் கொடுப்பது அல்லது வாங்குவது தொடர்பான புகார்களை தெரிவிக்க, சென்னை பெருநகர காவல்துறை சிறப்பு மாெபைல் எண்ணை அறிவித்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 28, 2026, 19:22 IST | Updated: Aug 28, 2026, 19:28 IST
Image Credit: Corruption X Page
Join

தவெக அரசு, லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என்கிற கொள்கையை முன்வைத்து, ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்னொரு புது அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள்..!

முதல்வர் விஜய், சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் “தொட மாட்டோம், தொடவும் விட மாட்டோம், தாெட்டவங்களையும் விட மாட்டோம்” என சூழைத்தார். அவர், லஞ்சத்தை ஒழிப்பேன் என்று சொன்னதோடு அதை சமீப சில நாட்களாக செய்தும் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.

லஞ்சம் கொடுக்கவும் வேண்டாம்..வாங்கவும் வேண்டாம்..

லஞ்சம் கேட்கப்படும் எந்தச் சூழலிலும் அச்சமின்றி Greater Chennai Police-க்கு தகவல் தெரிவிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு எண்ணாக 78717 23000 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, WhatsApp மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

”ஊழலைத் தடுப்போம்… நேர்மையான சமூகத்தை உருவாக்க அனைவரும் இணைவோம்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை!

தமிழகம் முழுக்க, பல்வேறு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.28 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், சந்தேகத்திற்கு இடமான வகையில் ரூ.89.89 லடம் பணப்பரிவர்த்தனை ஜிபே மூலம் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக, தமிழகம் முழுவதும் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் சுமார் ரூ.1.18 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் இருக்கும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதன் பேரில் இது நடந்துள்ளது. இதில், கிண்டியில் இருக்கும் அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து, சுமார் ரு.31 லட்சம் லஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் மட்டுமல்லாமல், பல்லாவரம், ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகங்கள், கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணம் பரிமுதல்:

இந்த சோதனையில், கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து மட்டும் சுமார் ரூ.31.52 லட்சம் லஞ்சப்பணம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய நாளில் நடந்த லஞ்ச ஒளிப்புத்துறையின் சோதனையிலேயே, அதிகபட்சமாக இங்குதான் அதிகமாக கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மொத்தம் எவ்வளவு?

தமிழ்நாடு முழுவதும் அதிரடியாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.1,18,14000 வரையிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரொக்கம் மட்டும் ரூ.28 லட்சத்திற்கும் மேல். ஜி.பே மூலமாக மட்டும் ரூ.89.89 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு நிறுத்தாமல், இது போன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, லஞ்சம் குறித்து புகார் கொடுக்க எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES