SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னை: போதையில் பைக் ரேஸ்.. ஒரே நாளில் 1047 வழக்குகள்.. புகார் எண் அறிவிப்பு

Chennai Bike Race Arrest: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1407 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Written By Umabarkavi K
Published: Oct 05, 2026, 12:18 PM IST | Updated: Oct 05, 2026, 12:30 PM IST
Join

Chennai Bike Race Arrest: சென்னையில் நள்ளிரவில் இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து பைக் ரேஸில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். இதற்காக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தாலும், தொர்ந்து இரவில் இளைஞர்கள் பைக் ரேஸில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், நேற்று போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

போதையில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் கைது

சென்னை போலீசார் வெளியிட்ட அறிவிப்பின்படி, நேற்று (04.10.2026) அதிகாலை, சுமார் 15 முதல் 20 அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனங்களில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகே, பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஆபத்தான முறையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டி, சாகசத்தில் ஈடுபட்டனர்.

மேற்கண்ட சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, மேற்படி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 16 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சாகசத்திற்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: சென்னையில் நாளை (அக்.5) மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? மின்வாரியம் அறிவிப்பு

இதனை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறைனரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனத் தணிக்கையின்போது, பதிவு எண் பலகைகள் இல்லாமல் (Without Number Plates) இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசம் என்ற பெயரில் வீலீங் செய்து, சாகசத்தில் ஈடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்படுகிறது.

 

 

புகார் எண் அறிவிப்பு

பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் சிறார்களாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100, Kaaval Uthavi App மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து புகார் எண்: 90031 30103 (WhatsApp) மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க: சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்! பெயர் சேர்க்க முக்கிய வாய்ப்பு..
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES