Chennai Court Jobs: சென்னை வேலைவாய்ப்பு - மாவட்ட ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு
Chennai Court Jobs: சென்னை சார்பு நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சார்நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராகப் (குற்றவியல் / உரிமையியல்) பணியாற்றுவதற்குத் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் மாலதி ஹெலன், தெரிவித்துள்ளார்.
வேலைக்கான தகுதிகள்
தமிழக அரசின் ஆணைப்படி, சார்நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்காகக் கடந்த ஜூன் 11, 2026 மற்றும் ஜூன் 24, 2026 ஆகிய தேதிகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழக அரசின் கடிதம் (Letter No.9987/Cts.VIA/2026-6, Dated:07.08.2026) வாயிலாக 'சிறப்பு அரசு வழக்கறிஞர்' (Special Public Prosecutor) நியமனம் செய்வதற்கான கூடுதல் தகுதிகள் மற்றும் தெளிவுரைகள் வழங்கப்பட்டு, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் இணையதள விவரம்
இப்பணிக்கான மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரின் விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennai.nic.in என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி, கடைசி தேதி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்:
முகவரி: மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, எண்.62, இராஜாஜி சாலை, சென்னை – 600001.
கடைசி நாள், நேரம்: 02.09.2026 (செப்டம்பர் 2, 2026) மாலை 05.45 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ள சட்ட வல்லுநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.