SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்! இலவச வைஃபை - பயன்படுத்துவது எப்படி?

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வை-ஃபை வசதி மீண்டும் தொடக்கம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Aug 11, 2026, 12:45 PM IST | Updated: Aug 11, 2026, 12:56 PM IST
Join

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளில் சீரமைப்பு செய்யப்பட்ட இலவச வை-ஃபை (Wi-Fi) வசதி ஆகஸ்ட் 10 முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சியை மக்களுக்கு எளிதாக வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரைப் பகுதிகளில் உயர்தரமான இலவச இணையப் பயன்பாட்டைத் தடையின்றி வழங்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

32 இடங்களில் இலவச வை-ஃபை:

இதன் முதற்கட்டமாக, பயன்பாட்டில் இல்லாமல் இருந்த வை-ஃபை வசதிகள் சீரமைக்கப்பட்டு மொத்தம் 32 இடங்களில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன:

மெரினா கடற்கரை: உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 27 இடங்களில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெசன்ட் நகர் கடற்கரை: 5 இடங்களில் இலவச வை-ஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்துவது எப்படி?

பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் (Mobile Phone) வை-ஃபை வசதியை 'ஆன்' செய்து, திரையில் தோன்றும் QR Code-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) பதிவு செய்தவுடன் இலவச இணைய இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

விரிவாக்கத் திட்டங்கள்:

துமக்கள் அதிகம் கூடும் பிற கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வை-ஃபை வசதிகளை மீண்டும் செயல்படுத்துவதற்கும், புதிதாக இலவச வை-ஃபை மையங்களை அமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES