SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னை மெட்ரோவில் இதையெல்லாம் செய்யாதீங்க.. ரூ.2500 அபராதம் - அலர்ட் பயணிகளே!

Chennai Metro Rail Rules: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் கட்டாயம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் ரூ.2500 அபராதம் விதிக்கப்படும். எனவே, மெட்ரோ ரயில் விதிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

Written By Umabarkavi K
Published: Aug 07, 2026, 05:21 PM IST | Updated: Aug 07, 2026, 06:34 PM IST
Join

Chennai Metro Rail: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து  வருகின்றனர். மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வார நாட்களில் பீக் ஹவரில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் ஒவ்வொரு 2 முதல் 3 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையில், மெட்ரோ ரயிலில் பயணிகள் சத்தமாக பேசப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து, அபராத தொகையை உயர்த்தியுள்ளது. 

ரூ.2500 அபராதம்

சென்னை மெட்ரோ இரயில் பயண ஒழுங்குமுறைகளின்படி, விதிகளை மீறி மற்றவர்களுக்குஇடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.  மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத்தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோதண்டனைக்குரிய குற்றமாகும்.

இதற்கான அபராதத் தொகை பிரிவு 59-இன் கீழ், முன்பிருந்த ரூ.500-லிருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரைஉயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோவளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோவில் என்னென்லாம் செய்யக் கூடாது?

மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில்அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரியகுற்றமாகக் கருதப்படும்.

செய்ய வேண்டியவை

சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் செவியில் பொருத்திகொள்ளும் ஒலிபெருக்கியை (Headphones) பயன்படுத்துமாறும், மெட்ரோ இரயில் மற்றும் அதன்வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும்சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES