மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு..ஞாயிறு அட்டவனைப்படி ரயில்கள் இயக்கம்! இதை தெரிஞ்சிக்கோங்க..
தீபாவளியை முன்னிட்டு, தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் செயல்பட்டு வரும் மெட்ரோ சேவையை, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஒரு நாள் ஒரு மெட்ரோ ரயில் சேவை பாதித்தாலும் அவர்களின் அன்றாட வேலை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது இன்றைய மெட்ரொ சேவைகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து மெட்ரோவில் செல்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.
பொது விடுமுறை:
தீபாவளி பண்டிகை தினமானது, ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி மகிழவும் மீண்டும் சென்னை திரும்பவும் சிரமமின்றி இருக்க அரசு ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது, திபாவளி தினத்திற்கு அடுத்த தினமான இன்றும் (திங்கட்கிழமை) பொது விடுமுறை விடப்பட்டது. இதனால், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள, இந்த நாளில் சென்னை திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் சேவைகள்:
சென்னை மாநகரில், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோயம்பேடு, சென்னை சென்ட்ரல், அண்ணா நகர், கிண்டி, வாஷ்ர்மேன்பேட் உள்ளிட்ட சேவைகளை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் சேர்த்து, சமீபத்தில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவைகளும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கானோர் மெட்ரோ ரயில்கள் மூலமாக தங்கள் விருப்ப இடத்தை சென்று சேர்கின்றனர். இவர்களில் பலர் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள திங்கட்கிழமையான இன்று மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, இன்று மெட்ரோ ரயில்கள் எந்த அட்டவணைப்படி இயங்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | சென்னை முருகன் கோவில்களுக்கு ஒருநாள் டூர்... தமிழக அரசு அறிவிப்பு
பொது விடுமுறை தினமான இன்று, சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள பதிவில் இன்று மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீலம் மற்றும் பச்சை வழித்தடம்!
நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் செயல்படும் மெட்ரோ ரயில்கள், காலை 5 மணி முதல், இரவு 11 மணி வரை இயக்கப்படும். இதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரைஇ 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மஞ்சள் வழித்தடத்தில் எப்படி?
மஞ்சள் வழித்தடத்திலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். எனவே, மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்துவோர், இந்த கால அட்டவணையை கருத்திற்கொண்டு தங்களின் பயணங்களை திட்டமிட்டு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தங்கள் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க | பயணிகளுக்கு குட் நியூஸ்! மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்