• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள், 5 இடங்களில் ஏறலாம்... விவரம் இதோ

ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள், 5 இடங்களில் ஏறலாம்... விவரம் இதோ

Chennai Holiday Special Buses: விடுமுறை கால நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் சிரமமின்றி பயணம் செய்வதை உறுதி செய்யவும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை 5 முக்கிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written BySripriya Sambathkumar
Published: Oct 16, 2026, 05:11 PM IST|Updated: Oct 16, 2026, 05:32 PM IST
joinshare
ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள், 5 இடங்களில் ஏறலாம்... விவரம் இதோ
Image Credit: Chennai Holiday Special Buses

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை: இந்தியாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பண்டிகை தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றது, நவராத்திரி பண்டிகையின் நிறைவாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி ஆகியவை அனுசரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஆயுத பூஜை விடுமுறைகள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வந்துள்ளன.

இதன் காரணமாக இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி பலர் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்யலாம்.

ஆயுதபூஜை சிறப்புப் பேருந்துகள் - உங்கள் ஊருக்கான சரியான பேருந்து நிலையத்தைத் தெரிந்துகொண்டு பயணத்தைத் திட்டமிடுங்கள்! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @TamilanParthib1 @arasubus @MtcChennai #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople https://t.co/gLOJXGoJVm

— TN DIPR (@TNDIPRNEWS) October 15, 2026

விடுமுறை கால நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் சிரமமின்றி பயணம் செய்வதை உறுதி செய்யவும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை 5 முக்கிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: தென் மற்றும் மேற்கு தமிழகம் நோக்கிய பேருந்துகள்

கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து, திண்டிவனம் வழியாகச் செல்லும் பேருந்துகளும், தமிழகத்தின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படும்.

பயணிகள் இங்கிருந்து பின்வரும் இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறலாம்:

  • திண்டிவனம் வழியாக: விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் கோயம்புத்தூர்.
  • திண்டிவனம் வழியாக கடலூர் பகுதிக்கு: பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில்.
  • புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதி: புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம்.
  • தென் தமிழகம்: திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டை.
  • பிற இடங்கள்: திண்டுக்கல், பழனி மற்றும் பொள்ளாச்சி.

இந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகள், பேருந்தில் ஏறுவதற்கு முன்பாக, முனையத்தில் உள்ள அறிவிப்புப் பலகையைப் பார்த்து, தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து எந்த நடைமேடையில் இருந்து புறப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | Explained : முஸ்லிமாக மதம் மாறுவோருக்கு நோ இட ஒதுக்கீடு! இது பல குடும்பங்களை பாதிக்குமா?

கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம்: கிண்டி வழியாகச் செல்லும் பேருந்துகள்

கிளாம்பாக்கத்தில் உள்ள சி.எம்.டி.ஏ (CMDA) கிளைமேட் பார்க் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, கிண்டி வழியாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

இங்கிருந்து பின்வரும் ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்:

  • திருவண்ணாமலை
  • போளூர்
  • செட்பெட்
  • வந்தவாசி

இந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், தங்கள் பேருந்து பிரதான கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து புறப்படுகிறதா அல்லது இந்தத் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம்: காவிரி டெல்டா பகுதிக்குச் செல்லும் பேருந்துகள்

மறைமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம் சோதனை அடிப்படையில் செயல்படும். இங்கிருந்து காவிரி டெல்டா பிராந்தியத்தின் முக்கிய இடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.

பின்வரும் இடங்களுக்குப் பேருந்து வசதிகள் உள்ளன:

  • .கும்பகோணம்
  • .நாகப்பட்டினம்
  • தஞ்சாவூர்

கிளாம்பாக்கத்தில் உள்ள மாநகரப் பேருந்து நிலையத்திற்கும் (MTC), மறைமலை நகரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கும் இடையே இணைப்புப் பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும். இவை பயணிகள் தங்கள் பேருந்து ஏறும் இடத்தைச் சென்றடைய உதவும்.

மேலும் படிக்க | புதுச்சேரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு: என்ன கிடைக்கும்? எப்படி பெறுவது?

கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR), வேலூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள்

கோயம்பேட்டில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து, கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகளும், வட தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

பின்வரும் இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளைப் பயணிகள் இங்கிருந்து பிடிக்கலாம்:

  • புதுச்சேரி
  • கடலூர்
  • சிதம்பரம்
  • மயிலாடுதுறை
  • .நாகப்பட்டினம்
  • வேளாங்கண்ணி
  • காஞ்சிபுரம்
  • .வேலூர்
  • ஓசூர்
  • பெங்களூரு
  • .திருத்தணி
  • .திருப்பதி

பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய சரியான பேருந்து நிலையத்தை உறுதிப்படுத்த, தங்கள் டிக்கெட் மற்றும் பேருந்து விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பின்வரும் இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளைப் பயணிகள் இங்கிருந்து பிடிக்கலாம்:

  • பொன்னேரி, 
  • ஊத்துக்கோட்டை, 
  • காளஹஸ்தி, 
  • திருப்பதி/நெல்லூர் செல்லும் பேருந்துகள் மற்றும் 
  • வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, 
  • சேலம், 
  • கும்பகோணம் மற்றும் 
  • திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்

மேலும் படிக்க | TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்., 17) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai