சென்னை: பயணிகளே அலர்ட்! இன்று முதல் மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த வழித்தடத்தில்?
Chennai Emu Train Cancelled: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சில ரயில்களின் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Chennai Emu Train Cancelled: சென்னையில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. மின்சார பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றும் வரும் புனரமைப்பு பணிகள் காரணமாக, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் எழும்பூர் ரயில் நிலையத்தில், இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து
ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி
- சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு 10.20, 11.20, 11.40 மற்றும் 11.59 மணி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- திருமலைபூர்–சென்னை கடற்கரைக்கு இடையே இயக்கப்படும். இரவு 8 மணி மின்சார ரயிலும், கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 10.15, 11.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், செங்கல்பட்டிலிருந்து இரவு 10.20, 11.00 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரைக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும்.
- ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7 வரை வார நாட்களில், அதிகாலை 3.50 மணி முதல் இயக்கப்படும் கடற்கரை- செங்கல்பட்டு மின்சார ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மின்சார ரயில் நேரத்தில் மாற்றம்
- இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் கடற்கரை - கூடுவாஞ்சேரி ரயில், இன்று முதல் 9.50 மணிக்கு புறப்படும்.
- இரவு 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
ஞாயிற்றுக்கிழமையில் ரயில்களில் சேவையில் மாற்றம்
- ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் பல மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
- இரவு 10,11.20,11.40, 11.59 மணிக்கு இயக்கப்படும் கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- இரவு 8 மணிக்கு இயக்கப்படும் திருமலைபூர் - கடற்கரை ரயிலும், இரவு 11, 11.40 மணிக்கு இயக்கப்படும் தாம்பரம் - கடற்கரை ரயில்களும் ரத்து.
- அதிகாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் கடற்கரை - செங்கல்பட்டு ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
- இரவு 10.20, 11.00 மணி செங்கல்பட்டு - கடற்கரை மின்சார ரயில்களும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
- இரவு 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய கடற்கரை-கூடுவாஞ்சேரி சேவை இரவு 10.10 மணிக்கு புறப்படும்.
- இரவு 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை கடற்கரை-தாம்பரம் சேவை இரவு 10.25 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.