SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிசம்பரில் திருப்பதி போறீங்களா? ரயில் சேவை 27 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai Tirupati Train: சென்னை - திருப்பதி ரயில் சேவை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Written By Umabarkavi K
Published: Oct 07, 2026, 10:07 AM IST | Updated: Oct 07, 2026, 10:11 AM IST
Join

Chennai Tirupati Train: ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். சென்னையில் இருந்து ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து திருப்பதி புறப்படும் ரயில், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நிலையில் தான், சென்னை திருப்பதி ரயில் சேவையில் 27 நாட்களுக்கு ரத்து  செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை - திருப்பதி ரயில்கள் ரத்து

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலைய யார்டில் 48 நாட்களுக்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை - திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலும், திருப்பதிக்கு இருந்து சென்ட்ரலுக்கு காலை 6.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

4 முக்கிய மெமு ரயில்கள் திருச்சானூருடன் நிறுத்தம்

அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரலில்  இருந்து திருப்பதி செல்லும் முன்பதிவில்லா MEMU ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மாற்றம் அக்டோபர் 7ஆம் தேதியான இன்று முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 4 ரயில்கள் திருப்பதி ரயில் நிலையத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, திருச்சானூர் (Tiruchanur) ரயில் நிலையத்துடனேயே நிறுத்தப்படும் மற்றும் அங்கிருந்தே புறப்படும்.  

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அரக்கோணத்தில் இருந்து சாமி தரிசனத்திற்காகத் திருப்பதிக்கு மெமு ரயில்களில் செல்லும் பக்தர்கள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். திருச்சானூர் (அலமேலுமங்காபுரம்) நிலையத்தில் இருந்து இறங்கி, அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் திருப்பதிக்கு சென்றடையலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES