• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த ரூட்டில் செல்ல முற்றிலும் தடை.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த ரூட்டில் செல்ல முற்றிலும் தடை.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Adambakkam Chennai Traffic Diversion: சென்னையில் ஆதம்பாக்கம், மஸ்தான்கோரி சாலை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே கழிவுநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வாகன ஓட்டிகள் அறிவிக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 11, 2026, 11:17 AM IST|Updated: Nov 11, 2026, 11:31 AM IST
joinshare
சென்னையில் போக்குவரத்து மாற்றம்!  இந்த ரூட்டில் செல்ல முற்றிலும் தடை.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Adambakkam Chennai Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்து வருகிறது. குறிப்பாக, காலை, மாலை என பீக் ஹவர்  நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதற்கிடையில், மெட்ரோ பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் போன்றவை நடந்து வருகிறது. இதனால், வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதற்கிடையில், சில பணிகளுக்காக சென்னை போக்கு வரத்து போலீசார் போக்குவரத்து மாற்றத்தை செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளளனர்.

ஆதம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

ஆதம்பாக்கம், மஸ்தான்கோரி சாலை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே கழிவுநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 15ஆம் தேத வரை இப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல், போக்குவரத்து தெற்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி சாலை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகில் சாலையில் RCC கழிவுநீர் பிரதானக் குழாய் சேதமடைந்துள்ளதால், அதனைச் சீரமைக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) சார்பாக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி புதிய கழிவுநீர் குழாய் இணைக்க வேண்டியுள்ளது.

மேலும் படிக்க: பயணிகளுக்கு குட் நியூஸ்! 1,000 புதிய ஏசி பேருந்துகள்.. எங்கு தெரியுமா? CM விஜய் அறிவிப்பு

🚧 போக்குவரத்து மாற்றம்! 📍 ஆதம்பாக்கம், மஸ்தான்கோரி சாலை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே கழிவுநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், 11.11.2026 முதல் 15.11.2026 வரை 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 🔀 வாகன ஓட்டிகள் அறிவிக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி, போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். #ChennaiTrafficPolice #TrafficDiversion #Adambakkam #TrafficAdvisory #Chennai

— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 10, 2026

வெளியான அறிவிப்பு

எனவே, போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் கீழ்க்கண்டவாறு 11.11.2026 முதல் 15.11.2026 வரை 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டிலிருந்து Officer Colony Main Road மஸ்தான்கோரி சாலை சந்திப்பு வழியாக பரங்கிமலை இரயில் நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் (அரசுப் பேருந்துகள் உட்பட) தடை செய்யப்பட்டு, கக்கன் நகர் மெயின் ரோடு - ஏரிக்கரை சாலை பிருந்தாவன் நகர் மெயின் ரோடு பாலாஜி நகர் மெயின் ரோடு MRTS சாலை வழியாக இடதுபுறம் திரும்பிச் செல்லலாம்.

மேலும், பரங்கிமலை இரயில் நிலையத்திலிருந்து NGO Colony செல்லும் அனைத்து வாகனங்களும், மேடவாக்கம் மெயின் ரோடு MRTS சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, MRTS சாலை பாலாஜி நகர் மெயின் ரோடு -பிருந்தாவன் நகர் மெயின் ரோடு ஏரிக்கரை சாலை கக்கன் நகர் மெயின் ரோடு வழியாகத் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பயணிகளுக்கு குட் நியூஸ்! மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai