சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த ரூட்டில் செல்ல முற்றிலும் தடை.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Adambakkam Chennai Traffic Diversion: சென்னையில் ஆதம்பாக்கம், மஸ்தான்கோரி சாலை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே கழிவுநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வாகன ஓட்டிகள் அறிவிக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Adambakkam Chennai Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்து வருகிறது. குறிப்பாக, காலை, மாலை என பீக் ஹவர் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதற்கிடையில், மெட்ரோ பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் போன்றவை நடந்து வருகிறது. இதனால், வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதற்கிடையில், சில பணிகளுக்காக சென்னை போக்கு வரத்து போலீசார் போக்குவரத்து மாற்றத்தை செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளளனர்.
ஆதம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
ஆதம்பாக்கம், மஸ்தான்கோரி சாலை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே கழிவுநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 15ஆம் தேத வரை இப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல், போக்குவரத்து தெற்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி சாலை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகில் சாலையில் RCC கழிவுநீர் பிரதானக் குழாய் சேதமடைந்துள்ளதால், அதனைச் சீரமைக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) சார்பாக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி புதிய கழிவுநீர் குழாய் இணைக்க வேண்டியுள்ளது.
வெளியான அறிவிப்பு
எனவே, போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் கீழ்க்கண்டவாறு 11.11.2026 முதல் 15.11.2026 வரை 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டிலிருந்து Officer Colony Main Road மஸ்தான்கோரி சாலை சந்திப்பு வழியாக பரங்கிமலை இரயில் நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் (அரசுப் பேருந்துகள் உட்பட) தடை செய்யப்பட்டு, கக்கன் நகர் மெயின் ரோடு - ஏரிக்கரை சாலை பிருந்தாவன் நகர் மெயின் ரோடு பாலாஜி நகர் மெயின் ரோடு MRTS சாலை வழியாக இடதுபுறம் திரும்பிச் செல்லலாம்.
மேலும், பரங்கிமலை இரயில் நிலையத்திலிருந்து NGO Colony செல்லும் அனைத்து வாகனங்களும், மேடவாக்கம் மெயின் ரோடு MRTS சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, MRTS சாலை பாலாஜி நகர் மெயின் ரோடு -பிருந்தாவன் நகர் மெயின் ரோடு ஏரிக்கரை சாலை கக்கன் நகர் மெயின் ரோடு வழியாகத் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பயணிகளுக்கு குட் நியூஸ்! மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்