SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னை வாட்டர் மெட்ரோ: 53 கி.மீ., எண்ணூர் டூ மாமல்லபுரம் - வந்தது புது அப்டேட்

Chennai Water Metro : சென்னை பக்கிங்காம் கால்வாயில் 53 கி.மீ., தூரத்திற்கு வாட்டர் மெட்ரோ கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.

Written By Sudharsan G
Published: Aug 13, 2026, 10:52 AM IST | Updated: Aug 13, 2026, 11:11 AM IST
Join

Chennai Water Metro : சென்னை பொது போக்குவரத்தில், சென்னை மெட்ரோ மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. சென்னை மெட்ரோவில் தற்போது இரண்டு வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மெட்ரோ முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது சென்னையின் பொது போக்குவரத்து சிறப்பாக இருக்கும். மக்களும் அதிகளவில் பயன்பெறுவார்கள். இந்நிலையில், சென்னையில் மெட்ரோ நெட்வோர்க் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

எண்ணூர் - மாமல்லபுரம் வாட்டர் மெட்ரோ

சென்னை பங்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ எனப்படும் படகு போக்குவரத்தை தொடங்க சென்னை மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 53 கி.மீ., தூரத்திற்கு இந்த வாட்டர் மெட்ரோவை கொண்டுவர திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து + சுற்றுலா

இதன்மூலம், பொது போக்குவரத்தில் மாற்ற போக்குவரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர்வழிப் போக்குவரத்தின் மூலம் மக்கள் விரைவாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று சேரலாம். மேலும் இது சுற்றுலாவிலும் முன்னேற்றத்தை கொண்டுவரும் என தெரிகிறது.

டெண்டர் கோரிய சென்னை மெட்ரோ

முன்மொழியப்பட்டுள்ள சென்னை வாட்டர் மெட்ரோ திட்டத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடும் செயல்முறையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தொடங்கி உள்ளது. முன்மொழியப்பட்ட நீர்வழிப் போக்குவரத்து வழித்தடத்திற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஆய்வு எதற்கு?

பயணிகள் படகு சேவைகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், வழித்தட தேவைகள், உள்கட்டமைப்பு, படகு முனையங்கள், வாட்டர் மெட்ரோவிற்கு தேவையான பிற வசதிகள் உள்ளிட்ட திட்டத்தின் பல்வேறு ஆராயவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மாநகர் - புறநகர் இணைப்பு

பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள இந்த 53 கி.மீ., வழித்தடம் எண்ணூர் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையேயான முக்கிய இடங்களை இணைக்கக்கூடும். இது செயல்பாட்டுக்கு வந்தால் சென்னை வாட்டர் மெட்ரோ கூடுதல் பொதுப் போக்குவரத்து வசதியை வழங்குவதோடு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தவும் உதவும்.

சென்னையே மொத்தமாக மாறும்

சென்னை வாட்டர் மெட்ரோ திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு வாய்ப்புகள் குறித்தும் ஆய்வுகள் தெளிவுப்படுத்தும் என எதிர்பாரக்கலாம். எனவே, சென்னை வாட்டர் மெட்ரோ செயல்பாட்டுக்கு வருவது தொடர்பான அடுத்தக்கட்ட முடிவுகள், இந்த ஆய்வின் அடிப்படையில்தான் எடுக்கப்படும்.

முன்மொழியப்பட்ட நீர்வழிப் போக்குவரத்து அமைப்பானது, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில்கள் மற்றும் எம்டிசி பேருந்து சேவைகள் உள்ளிட்ட தற்போதுள்ள பொதுப் போக்குவரத்து முறைகளுக்கு துணையாக இருக்கும்.

கொச்சி வாட்டர் மெட்ரோ

இந்தியாவில் ஒரே ஒரு வாட்டர் மெட்ரோ மட்டுமே தற்போது இயங்கி வருகிறது, கேரளா மாநிலம் கொச்சியில் வாடடர் மெட்ரோ இயக்கப்பட்டு வருகிறது. கொச்சி வாட்டர் மெட்ரோ தான் உலகின் முதல் ஒருங்கிணைந்த நீட் மெட்ரோ அமைப்பாகும்.

இது பேட்டரி மூலம் இயங்கும் மின்சார ஹைபிரீட் படகுகளை பயன்படுத்தி கொச்சி பெருநிலைப்பரப்பைச் சுற்றி உள்ள 10 தீவுகளுடன் இணைத்து நிலையான நகர்ப்புற நீர்வழிப் போக்குவரத்தை கொண்டுள்ளது. இது உலகளாவிய அளவுகோலாக விளங்குகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES