• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை.. தம்பதி அதிரடி கைது.. மணிப்பூரில் சிக்கியது எப்படி?

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை.. தம்பதி அதிரடி கைது.. மணிப்பூரில் சிக்கியது எப்படி?

Chennai Guduvancheri Murder Case: சென்னை கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் கொலையாளி மானிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகவதி மாஜியை போலீசார் கைது செய்தனர். மணிப்பூரில் தலைமறைவாக இருந்த தம்பதியை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written ByUmabarkavi K
Published: Aug 30, 2026, 01:28 PM IST|Updated: Aug 30, 2026, 01:47 PM IST
joinshare
கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை.. தம்பதி அதிரடி கைது.. மணிப்பூரில் சிக்கியது எப்படி?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

2

அரசு ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை: நேரடியாக மனு அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை!

3

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

4

விவசாயிகளுக்கு மெகா தீபாவளி பரிசு: 50,000 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்க உத்தரவு!

5

மண் சரிவில் சிக்கிய அரசு பஸ்... ஓட்டுநர் பலி - ஊட்டிக்கு செல்ல தடை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Guduvancheri Murder Case: ஆக்ரா ரயில் நிலையத்தில் சூட்கேசில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் கூடுவாஞ்சேரி போலீசார் கொலையாளியை அதிரடியாக கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கூடுவாஞ்சேரி கொலை வழக்கு

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஆக்ராவை வந்தடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவப்பு நிற சூட்கேஸினுள் ஆணா? பெண்ணா? என அடையாளம் தெரியாத சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது. உடல் பாகங்களை ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது. தலை மற்றும் சில கை கால்கள் இல்லாமல் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உத்தரப் பிரதேச அரசு ரயில்வே காவல்துறை,  தமிழ்நாடு ரயில்வே காவல்துறையின் உதவியை நாடினர்.

ரயிலில் ஏறுவதற்கு முன்பு, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்னை சென்ட்ரலுக்குள் நுழைவதை சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துள்ளதும்,  தம்பதியினர் சூட்கேஸை ஒரு பெட்டிக்குள் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே அதிலிருந்து இறங்கி, சென்னை பார்க் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து புறநகர் ரயிலில் ஏறி கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கியதும் சிசிடிவி காட்சி உதவியுடன் ரயில்வே போலீசார் கண்டறிந்தனர்.

கூடுவாஞ்சேரியில் இறங்கிய அந்த தம்பதி அங்கிருந்து ஆட்டோ மூலமாக தப்பி சென்றிருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வீட்டிலிருந்து அந்த தம்பதி சூட்கேசுடன் சென்றது தெரிய வந்தது.

இந்நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்ற போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீடு முழுவதும் இரத்தமாக காட்சி அளித்ததும், ஒருவரை கொலை செய்து உடலை எலும்பு தனியாக, சதை தனியாக வெட்டி எடுத்து மைதா மாவு காய்கறிகள் போட்டு பெரிய பாத்திரத்தில் வைத்து சமைத்துள்ளனர்.

தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த வீட்டில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் என மூன்று ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்துள்ளனர். ஒரு ஆண், ஒரு பெண்ணிற்கு 35 வயதிற்கு உள்ளாகவும், மற்றொரு பெண் 45 வயது மதிக்கத்தக்கவராக இருந்துள்ளார்.

கொலைக்கான காரணம்

கொலையாளிகளின் புகைப்படத்தை காட்டி உறுதிப்படுத்திய போலீசார் இறந்த பெண் அய்துல் நிஷா என்பதும் தாம்பரம் மெப்ஸ்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 19-வயதில் மகன் உள்ளதும் இவர் தாம்பரத்தில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து அவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட அய்துல் நிஷாவும் தனது கணவரை பிரிந்து மகனுடன் தாம்பரத்தில் வசித்து வந்த நிலையில் கொலையாளியுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூன் மாதம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து கொலையாளி தம்பதியும் கொலை செய்யப்பட்ட பெண் ஆகிய மூவரும் ஒன்றாக தங்கி உள்ளது தெரியவந்தது. 

நிஷாவுடன் ஏற்பட்ட பழக்கம் தனது மனைவி பகவதி மாஜிக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால், நிஷாவுடன் பழகுவதை நிறுத்துவதாக அவரிடம் நேரடியாக கொலையாளி தெரிவித்துள்ளாராம். ஆனால், அதற்கு ஒப்புக் கொள்ளாத நிஷா, கொலையாளி தம்பதியை மிரட்டியுள்ளார். 

இதனால், நிஷாவை கொலை செய்துள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று நிஷாவுடன் மோதல் ஏற்பட்டதால் ஆத்திரத்தில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து, அதனை மறைப்பதற்கு சூட்கேஸில் உடலை வைத்து ரயிலில் அனுப்பியதாக தெரிகிறது.

கொலையாளி கைது

இந்த கொலை சம்பவம் நடைபெற்ற இடம் என்பதால் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை பிடிக்க திட்டமிட்டனர். கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் கொலையாளி மானிக் உத்தின் லஸ்கர்(22) என்பவரை கைது செய்தனர்.  மணிப்பூரில் தலைமறைவாக இருந்த நபரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட நபரின் மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், அவரையும் சில மணி நேரங்களில் அவரது மனைவி பகவதி மாஜியையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணிக் உத்தின் லஸ்கார், அவரது மனைவி பகவதி மாஜி என்பவரை சென்னை அழைத்து வருவதற்காக ட்ரான்ஸ்லேட் வாரண்ட் பெறுவதற்கான முயற்சியில் தற்பொழுது கூடுவாஞ்சேரி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime