• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மண் சரிவில் சிக்கிய அரசு பஸ்... ஓட்டுநர் பலி - ஊட்டிக்கு செல்ல தடை

மண் சரிவில் சிக்கிய அரசு பஸ்... ஓட்டுநர் பலி - ஊட்டிக்கு செல்ல தடை

Mudslide In The Nilgiris: அரசு பேருந்து சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6 மணிமுதல் காலை 7 மணிவரை நிறுத்தப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written BySudharsan G
Published: Oct 24, 2026, 01:42 PM IST|Updated: Oct 24, 2026, 01:55 PM IST
joinshare
மண் சரிவில் சிக்கிய அரசு பஸ்... ஓட்டுநர் பலி - ஊட்டிக்கு செல்ல தடை
Image Credit: Nilgiris Mudslide | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அரசு ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை: நேரடியாக மனு அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை: நேரடியாக மனு அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை!

2

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

3

விவசாயிகளுக்கு மெகா தீபாவளி பரிசு: 50,000 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்க உத்தரவு!

4

மண் சரிவில் சிக்கிய அரசு பஸ்... ஓட்டுநர் பலி - ஊட்டிக்கு செல்ல தடை

5

பிக்பாஸ் 10 : ஜேசனுடன் நெருக்கம்..என்னை குறை சொல்ல நீங்கள் யார்? சாந்தினி அதிரடி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Mudslide In The Nilgiris: உதகை - மேட்டுப்பாளையம் இடையே மூன்று நாட்களுக்கு இரவில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மாலை 6 மணிமுதல் காலை 7 மணிவரை வாகனங்கள் செல்ல தடைவிதித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரத்தில் அத்தியாவசிய மற்றும் அவசர கால வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உதகை மலைப்பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை! மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..புயல் எப்போ வருது?

மாவட்ட ஆட்சியரின் உத்தரவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில், அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை சீராகும் வரை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக உதகை செல்லும் பொதுமக்கள் மலைப்பாதைகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6 மணிமுதல் காலை 7 மணிவரை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை, அதிகாலை நேரங்களில் எவ்வித போக்குவரத்தும் இருக்காது என்பது தெரிகிறது.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு

எனவே, அத்தியாவசிய தேவையை தவிர பொதுமக்கள் பொது இடங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்வதை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளது. இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது நீலகிரி மாவட்ட மக்கள் 1077, 0423-2450034, 0423-2450035 என்ற அவசர உதவி எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை தவிருங்கள்..பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

மண் சரிவில் சிக்கிய பேருந்து

முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றிரவு முதலே உதகையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதேபோல், பல இடங்களில் பாறைகளும் சாலைகளில் உருண்டு விழுந்தன.

அந்த வகையில் கோவையில் இருந்து ஊட்டிக்கு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து பரலியார் சாலையில் செல்லும்போது திடீரென பஞ்சராகி நின்றது. அதில் இருந்து அனைத்து பயணிகளையும் வேறு வாகனத்தில் அனுப்பிவைத்துள்ளனர்.

VIDEO | Tamil Nadu: Landslide hits government bus near Burliyar amid heavy rains in Nilgiris district. (Source: Third Party) (Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) https://t.co/YGlQYtXMEl

— Press Trust of India (@PTI_News) October 24, 2026

ஓட்டுநர் உயிரிழப்பு

வேறு டயரை மாற்றிவிட்டு ஓட்டுநரும் நடத்துனரும் மட்டும் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டு, பாறைகளும் பேருந்தின் மீது உருண்டு வந்தன. மண் சிரிவில் சிக்கிய ஓட்டுநர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடத்துநர் காயத்துடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் கடும் போராட்டத்திற்கு பிறகு ஓட்டுநரின் சடலத்தை மீட்டனர். நடத்துனரை காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் படிக்க | தமிழகத்தின் இந்த 3 பகுதிகளில் நிலச்சரிவு அபாயம்.. வெதர்மேன் எச்சரிக்கை!

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather